
சிவாஜி, ரஜினி, கமல் பட நடிகர்:
80ஸ் கால கட்டத்தில் பிரபல நடிகரானசக்ரவர்த்தி, தமிழில் ரிஷி மூலம், முள்ளில்லாத ரோஜா உள்ளிட்ட 80 திற்கும் அதிமான திரைப்படங்களில் தமிழில் நடித்துள்ளார். சிவாஜி, ரஜினி, கமல் என்று பல நாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சக்ரவர்த்தி. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
80 திற்கும் அதிமான திரைப்படங்களில் நடித்தவர்:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருந்து வந்த சக்ரவர்த்தி, சினிமாவில் இருந்து விலகி மும்பையில் குடும்பத்தினருக்கும் வசித்து வந்துள்ளார். இதையடுத்து அவர் அங்கு, சோனி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
மும்பையில் காலமானார்:
இந்நிலையில், உடல் நலகுறைவு காரணமாக இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மயக்கி விழுந்து உயிர் பிரிந்துள்ளார். காலையில் மனைவி லலிதா வந்து பார்த்த போது, அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இவரது மனைவியான லலிதா மற்றும் சக்ரவர்த்தி தம்பத்தினருக்கு சசிகுமார், அஜய் குமார் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.