
காத்து வாக்குல மாட்டிக்கொண்ட நாயகன் :
தற்போது வெளியாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் டிரைலர் கலர் புல் பின்னனியில் அமைந்துள்ளது. விஜயின் குஷி பட பாணியில் சிறுமிகள் கோவிலில் ஏற்றி வைத்த விளக்கை அணையாமல் காப்பதற்கு நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி என மூவரும் கை சேர்க்கின்றனர். நெருங்கிய தோழிகளாக ஒரே இடத்தில் வேலை பார்க்கும் கண்மணி ( நயன்தாரா ) கதிஜா (சமந்தா) இருவரும் நாயகன் விஜய் சேதுபதியின் காதல் வலையில் தனித்தனியே விழுகின்றனர்.
பின்னர் ஒரு கட்டத்தில் முக்கோண காதல் விவகாரம் தெரிய வருகிறது.ஆனாலும் இருவரும் நாயகனை விட்டு தருவதாக தெரியவில்லை. அதோடு நனையும் ரவுடி தான் ஸ்டைலில் தான் நாயகனை சந்திக்கிறார் நயன்தாரா. இரு பிள்ளைகளுக்கு தாயான கண்மணியை கரம் பிடிப்பாரா? அல்லது டிஸ்க்கோ, பார் என சுற்றும் மாடர்ன் கதீஜாவை கிராம் பிடிப்பாரா? என்பதே மீதி கதை ஆனால் இருவரும் நயனை விட்டு விலக கடைசியில் முரட்டு சிங்குளாகவே விஜய் சேதுபதி இருப்பர் என்றும் முன்னதாக தகவல் கசிந்தது.
நயன் - விக்கி கூட்டணியில் :
விஜய் சேதுபதி -நயன்தாராவின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த நானும் ரவுடிதான் படத்தின் மூலம் பிரபலமான விக்னேஷ் சிவன். அதே கூட்டணியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார். சமந்தாவும் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
ஹிட் அடித்த பாடல்கள் :
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசரை தொடர்ந்து நான் பிழை, டூடூடூ மற்றும் டிப்பம் டப்பம் என்னும் மூன்று பாடல்களும் வெளியாகி செம ஹிட் கொடுத்தது. இந்த படம் வரும் 28-ம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.