Amaichar movie : தமிழ் சினிமாவில் பலவிதமான அரசியல் படங்கள் வந்திருந்தாலும், இது ஒரு அமைச்சரின் காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருப்பதாக இயக்குனர் எல்.முத்து குமாரசாமி கூறி உள்ளார்.
ரோஜா கூட்டம், திரி ரோசஸ், கிச்சா வயசு 16 போன்ற படங்களில் நடித்து பிரபலமான ஜெய் ஆகாஷ், நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அமைச்சர்’. ஸ்ரீ அம்மன் மீடியாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் ஜெய் ஆகாஷுக்கு ஜோடியாக தேவிகா நடித்துள்ளார்.
இப்படத்தில் காவல் துறை முன்னாள் அதிகாரி ராஜன், சர்வதேச விளையாட்டு வீரர் செளந்தரராஜன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான புஷ்பவதி, அருணாச்சலம் போன்ற ரியல் ஹீரோஸும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவா இசையமைத்துள்ள இப்படத்தை எல்.முத்து குமாரசாமி இயக்கி உள்ளார்.
தமிழ் சினிமாவில் பலவிதமான அரசியல் படங்கள் வந்திருந்தாலும், இது ஒரு அமைச்சரின் காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருப்பதாக இயக்குனர் எல்.முத்து குமாரசாமி கூறி உள்ளார். இதைக்கேட்டதும் யார் அந்த அமைச்சர் என்ற கேள்விதான் முதலில் எழும், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இது நிஜக்கதை இல்லை என தெரிவித்துள்ளார் இயக்குனர்.
இருப்பினும் சில நிஜ சம்பவங்களோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடியதாக இந்த படத்தின் கதை இருக்கும் என தெரிவித்துள்ள அவர், இப்படத்தின் படப்பிடிப்பை குற்றாலம், திருத்தணி மற்றும் சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கியதாக தெரிவித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 29-ந் தேதி தமிழகம் முழுவதும் திரைகாண உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... Radhika Sarathkumar : இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சாதனை விருது பெற்று கெத்து காட்டிய ராதிகா