
அஜீத்தின் ஜோடியாக ‘பிங்க்’ ரீமேக்கில் நடிக்கவிருக்கும் வித்யா பாலன் படத்தில் மொத்தம் ஐந்தே காட்சிகளில் வருவதால் ஆறு நாட்கள் மட்டுமே அவரிடம் கால்ஷீட் கேட்டிருப்பதாக வட இந்திய இணைய இதழ் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.
இது குறித்து பேசிய அவர், ‘இந்தியில் இருந்த அளவுக்குப் படம் ராவாக இருக்கக் கூடாது என்பதற்காகவே தமிழில் அஜீத்துக்கு ஜோடியாக வித்யா பாலனைப் போட்டோம். அவர் படத்தில் மொத்தம் 5 காட்சிகளில் மட்டுமே வருவார் என்பதால் 6 நாட்கள் கால்ஷீட் போதுமென்று இயக்குநர் தரப்பில் சொல்லப்பட்டதால் வித்யா பாலனிடம் 6 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்டிருக்கிறோம்.
அதே போல் இந்தியில் இரண்டு பாடல்களாக இருந்ததை தமிழில் 4 பாடல்கள் என்று மாற்றியிருக்கிறோம். அதில் ஒரு பாடலில் மூன்று நாயகிகளும் அறிமுகப்படுத்தப்பட இன்னொரு பாடல் அஜீத்துக்கும் வித்யா பாலனுக்குமான நெருக்கம் தொடர்பானது. மற்ற இரண்டு பாடல்களும் கதையை ஒட்டி வரும்.
படத்தில் தமிழ் ரசிகர்களுக்காகவும் அஜீத் ரசிகர்களுக்காகவும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் இந்தியில் ஒரிஜினலை எழுதிய ஷூஜித் சிர்கர், ரிதேஷ் ஷா ஆகிய இருவரையும் கலந்தாலாசித்தே இறுதி செய்ப்பட்டன. இந்த இருவரையும் தமிழ் இயக்குநர் ஹெச்.விநோத் இது தொடர்பாக நான்கு முறை சந்தித்தார் என்கிறார் போனி கபூர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.