தல '59 ' படம் பற்றி வெளியான முக்கிய தகவல்!

By manimegalai aFirst Published Feb 3, 2019, 3:36 PM IST
Highlights

தல அஜித், 'விஸ்வாசம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது தன்னுடைய கவனத்தை அடுத்ததாக நடிக்க உள்ள பிங்க் படத்தின் ரீமேக் மீது செலுத்தி வருகிறார்.
 

தல அஜித், 'விஸ்வாசம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது தன்னுடைய கவனத்தை அடுத்ததாக நடிக்க உள்ள பிங்க் படத்தின் ரீமேக் மீது செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் 'தல 59' திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. இந்த படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். 

மேலும் தற்போது பிங்க் படத்தில் நடித்த மூன்று முக்கிய நடிகைகளுக்கு பதில் எந்த நடிகைகள் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை டாப்சி நடித்த கேரக்டரில் ஷராதா ஸ்ரீநாத் நடிக்க உள்ளார், கிரித்தி கில்ஹாரி நடித்த கேரக்டரில் அபிராமி வெங்கடாச்சலமும் நடிக்கவுள்ளனர். மேலும், ஆண்ட்ரியா தரங் கேரக்டரில் அவரே நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் அபிதாபச்சன்  நடித்த கேரக்டரில் நடிக்கும் அஜித்துக்கு மனைவியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று தல அஜித் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகியது.  ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கி ஒரு சில நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

click me!