
’கடவுளே உங்கள சின்ன ரூமுக்குள்ள வச்சிக் கும்பிடுறேன்னு தப்பா நினைக்காதீங்க. நான் அரசியல்ல பெரிய ஆள் ஆனவுடனே உங்க எல்லாருக்கும் 3000 கோடி ரூபாய்ல சிலை வடிச்சிக் கும்பிடுறேன்’ என்று பிரதமர் மோடி தொடங்கி தெர்மாகோல் அமைச்சர் செல்லூர் ராஜூ வரை வச்சு செய்திருக்கிறார் நடிகர் பாலாஜி.
நடிகரும் பிரபல பண்பலை தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள எல்.கே.ஜி படத்தின் டிரைலர்நேற்று ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியில் வெளியாகி வைரலாகி வருகிறது.’வடகறி’, ’நானும் ரவுடி தான்’, ’காற்று வெளியிடை’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் பண்பலை தொகுப்பாளர் ஆர்.ஜே.பாலாஜிபுதுமுக இயக்குநர் கே.ஆர்.பிரபு இயக்கும் ’எல்.கே.ஜி’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கான கதையை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் எழுதி இயக்கியுள்ளனர். அரசியல்வாதிகள் நாஞ்சில் சம்பத்தும் ஜே.கே.ரித்திஸும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆக எல்.கே.ஜி. ரிலீஸ் சமயத்துல ஹெச். ராஜா, மேடம் தமிழிசை, அர்ஜூன் சம்பத்களுக்கு பிசியான வேலை காத்திருக்கு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.