சூரி - விஜய் சேதுபதி நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை பார்ட் 1' படத்தின் ரிலீஸ் தேதி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் 'விடுதலை'. அசுரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் சுமார் நான்கு ஆண்டுகள் வெற்றிமாறன் இயக்கத்தில் எந்த ஒரு படமும் வெளியாகாமல் இருந்த நிலையில், நீண்ட கால படபிடிப்புக்கு பின்னர் தற்போது விடுதலை படத்தின் முதல் பாகம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்கிற மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ஏற்கனவே முடிக்கப்பட்ட 'விடுதலை' படத்தின் முதல் பாகத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
ஸ்ருதி ஹாசன் - சித்தார்த் லவ் பிரேக்கப்புக்கு காரணம் சூர்யாவா? இது என்னடா புது புரளியா இருக்கு..!
அந்த வகையில், 'விடுதலை' படத்தின் முதல் பாகம், மார்ச் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் இப்படத்தின் ரிலீசுக்கு உள்ளதும், இப்படம் ஜெயகாந்தன் எழுதிய துணைவன் என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தை ஆர் எஸ் இன்ஃபோடின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 4 கோடி பட்ஜெட்டில் எடுக்க திட்டமிடப்பட்ட இப்படம் 40 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
The Freedom struggle is about get underway!
Director 's worldwide release on March 31st. Musical pic.twitter.com/esn6VRUNHc