
பாலிவுட்டில் தற்போது பரவலாக பேசப்படும் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் (Katrina Kaif) மற்றும் விக்கி கௌஷல் (Vicky Kaushal ) திருமணம் ராஜஸ்தானில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில்கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி முதல் களைகட்ட ஆரம்பித்தது கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் திருமண சடங்குகள்.
7-ம் தேதி நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் சில பாலிவுட் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டனர். பிரமாண்டமாக நடைபெற்றாலும் பெரியளவில் விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதோடு நிகழ்வு குறித்த வீடியோக்களும் ,போட்டாக்களும் மிகவும் சீக்ரெட்டாகவே வைக்கப்பட்டிருந்தது.
இவர்களது பிரமாண்ட திருமணத்தில் 120 பேர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், விருந்தினர்கள் யாரும் மொபைல் அல்லது கேமரா எடுத்து வர தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து கண்டிஷனை விக்கி - கத்ரீனா ஜோடி தங்களுடைய திருமண பத்திரிகைகளிலும் குறிப்பிட்டிருந்தனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
டிசம்பர் 8 ஆம் தேதி நடந்த மெஹந்தி நிகழ்ச்சியிலும் இரு தரப்பு குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். முன்னதாக திருமணத்தில் கலந்து கொண்ட சில பாலிவுட் பிரபலங்களுக்காக 40க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் சல்மான் கான், ஷாருக்கான், ஆலியா பட், ரோஹித் ஷெட்டி, ஃபர்ஹான் கான் மற்றும் பலர் அடங்குவர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இறுதியாக, டிசம்பர் 9 ஆம் தேதி நேற்று , திருமணம் நடைபற்றது. இந்து,கிறிஸ்துவம் என இரு முறையில் இந்த திருமணம் நடைபெற்றதாகா தெரிகிறது. இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோட்டை பால்கனியில் நின்றபடி இருவரும் மணமாலை மாற்றிக்கொண்டனர். அந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.
கோலாகலமாக நடைபெற்று வரம் திருமண விழாவின் ஒரு பகுதியாக நேற்று இரவு சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பஞ்சாபி இசையில் கோட்டை முழுவதும் களைகட்டி இருந்தது. பொழுது போக்கிற்கு, முன்னணி பாடகர்களின் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், அவர்களுக்கும் ஸ்மார்ட் போன் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 9 ஆம் தேதி, நடிகை கத்ரீனா கைஃப் சொந்த பந்தங்கள் சூழ அனைவரது ஆசீர்வாதத்துடன் அக்னி சாட்சியாக தனது நீண்ட நாள் காதலன் விக்கி கௌஷலை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களின் திருமணத்தை படம் பிடித்து ஒளிபரப்ப பிரபல ஓடிடி நிறுவனம் சுமார் 80 கோடியை அள்ளி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.