Bigg Boss Tamil 5 :தாமரையுடன் சமாதானம் என்னும் புதிய யுக்தியை கையிலெடுத்த பிரியங்கா!!

Kanmani P   | Asianet News
Published : Dec 11, 2021, 07:47 AM ISTUpdated : Dec 11, 2021, 07:48 AM IST
Bigg Boss Tamil 5 :தாமரையுடன் சமாதானம்  என்னும் புதிய யுக்தியை கையிலெடுத்த பிரியங்கா!!

சுருக்கம்

Bigg bigg tamil5 : ஹவுஸ்மேட்டை  சந்திக்கும் கமல்அரசியல் என்கிற பெயரில் நடந்த அராஜகத்தை கேட்பார் என்பதால் பின்வாங்கிய பிரியங்கா உடனடி ஆயுதமாக தாமரையுடன் சமாதானம் ஆக முயற்சிக்கிறார். 

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் இதுவரை நமீதா, நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, ஐக்கி, அபிஷேக் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 12 போட்டியாளர்கள் உள்ளனர். 

இந்த வாரம் தாமரை, சிபி, அபினய், நிரூப், அக்ஷ்ரா, அமீர், இமான் ஆகியோர் இந்தவார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.  நாளை யார் வெளியேறப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இதில் அபினய் அல்லது நிரூப் வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் கொடுக்கப்பட்ட அரசியல் மாநாடு டாஸ்க் மிகப்பெரிய கலவரத்தையே ஏற்படுத்தியிருந்தது. இதில் ஹவுஸ் மேட்ஸ் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று கட்சிகளை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி இந்த டாஸ்கில் ராஜு, தாமரை, நிரூப் , சிபி ஒரு அணியாகவும் சஞ்சீவ், இமான், வருண், அக்ஷ்ரா ஒரு அணியாகவும், அபினய், பிரியங்கா, அமீர், பாவ்னி ஒரு அணியாக உள்ளனர்.

அரசியல்வாதிகள் போல ஆண்கள் வெள்ளை சட்டை, வேஷ்டியிலும், பெண்கள் அனைவரும் சேலை அணிந்தும் இருந்தனர். மேலும் உண்மையான அரசியல் களம் போலவே அனைவரும் காரசாரமாகவும், எதிர்தரப்பை கடுமையாக தாக்கி பேசிவந்தனர். இதில் பிரியங்கா-தாமரை இடையே பெரிய போரே நடைபெற்றது.

தரக்குறைவான வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் விமரிசனங்களை அல்லி தெளித்தனர். பிரியங்காவும் துணையாக இந்த வார தலைவரான பாவனியும் காய் கோர்க்க தாமரையை ஒரு வெளியாக்கி விட்டனர். இது பிரியங்காவின் மவுஸை வெளியில் சற்று குறைத்துள்ளது  என்றே சொல்லப்படுகிறது.

இதற்கிடையே இன்று ஹவுஸ்மேட்டை  சந்திக்கும் கமல்அரசியல் என்கிற பெயரில் நடந்த அராஜகத்தை கேட்பார் என்பதால் பின்வாங்கிய பிரியங்கா உடனடி ஆயுதமாக தாமரையுடன் சமாதானம் ஆக முயற்சிக்கிறார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எந்தவித ஆரவாரமும் இல்லாமல் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 3 சிறந்த படங்கள்!
இவ்வளவு நடந்தும் இன்னும் டிராமாவா: நான் மருமகள் தானே மன்னிக்க கூடாதா: கதறிய தங்கமயில்!