
கோலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி இருந்த நிலையில், ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் வசந்த் ரவி, மிர்ணா, யோகி பாபு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன் லால், சிவராஜ்குமார், ஆகியோர் கேமியோ ரோலில் நடித்து அசத்தி இருந்தனர். இவர்களை தவிர ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
பெங்களூரில் புதிய வீடு வாங்கி... கிரஹப்பிரவேசம் செய்த நடிகை மிருணாளினி ரவி! வைரல் போட்டோஸ்!
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், சுமார் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக கூறப்பட்ட நிலையில்... இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது 'ஜெய்பீம்' பட இயக்குனர், டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். என்கவுண்டருக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் ஆடியோ லான்ச் தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது.
மேலும் ரஜினிகாந்த் காரிலிருந்து இறங்கி, ஆடியோ லான்ச் நடக்கும் விழா மேடைக்கு செல்லும் வீடியோவை ரசிகர்கள் வெளியிட்டு வைரலாகி வருகின்றனர். ரஜினிகாந்த் கருப்பு நிற சட்டை அணிந்து மிகவும் எளிமையாக வீறு நடை போட்டு உள்ளே செல்லும் போது... ரசிகர்கள் தலைவா என குரல் கொடுக்க, உடனடியாக திரும்பி தன்னுடைய நன்றியை கை கூப்பி தெரிவிக்கிறார். இந்த காட்சி ரஜினிகாந்த் ரசிகர்கள் மீது வைத்துள்ள பாசத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
என்கவுண்டர் தண்டனை இல்லை.. முன்னெச்சரிக்கை! ரஜினிகாந்த் தோட்டா தெறிக்கும் 'வேட்டையன்' பிரிவியூ!
இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் அண்மையில் வெளியான இந்த படத்தின் சிங்கிள் பாடலான மனசிலாயோ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் பகத் பாசில், ராணா, அமிதாபச்சன், போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ரித்திகா சிங், துஷாரா விஜயன், போன்ற நடிகைகளும் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.