
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பாடகராக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் பாடகர் மனோ. தமிழ் மொழி மட்டுமின்றி கன்னடம், மலையாளம், துளு, கொங்குநீ மற்றும் அசாமி உள்ளிட்ட பல மொழிகளில் நல்ல பல பாடல்களை பாடி மாபெரும் பாடகராக விளங்கி வரும் மனோவிற்கு சோபியா, சாகிர் மற்றும் மற்றும் ரபி என்று மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இதில் ஷாகிர் மற்றும் ரஃபி ஆகிய இருவர் மீதும், சிறுவர்களை தாக்கியதாக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது தமிழ் திரை உலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாடகர் மனோவின் மகன்கள் சில தினங்களுக்கு முன்பு, சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றதாகவும், அப்பொழுது அங்கு மது போதையில் இருந்த சிறுவர்கள் சிலர் அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான சில சிசிடிவி காட்சிகள் கூட இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மனோவின் மகன்கள் மற்றும் அவரது நண்பர்கள் சிலரிடம் போலீஸ் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
தற்பொழுது மனோவின் மகன்கள் இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்கள் சிறுவர்களை தாக்கியதாக கூறப்படும் இந்த சூழலில், 10 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து, மனோவின் மகன்கள் இருவரையும் சரமாரியாக தாக்குவது போன்ற CCTV காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து பேசி உள்ள மனோவின் மனைவி ஜமீலா பாபு, "உண்மையில் நடந்தது என்ன என்று தெரியாமல் இஷ்டத்துக்கு பலர் பல கட்டுக்கதைகளை கூறி வருகின்றனர். உண்மையில் எனது மகன்கள் தாக்கப்பட்டதன் காரணமாகத்தான், தற்காப்புக்காக அவர்கள் மீண்டும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நடந்த பிறகு எனது வீட்டுப் பிள்ளைகள் வெளியில் செல்ல கூட மிகவும் அஞ்சுகிறார்கள். என் இரண்டு மகன்களுக்கு என்ன ஆனது இப்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை".
"முன்பு ஆதாரம் எதுவும் எங்களிடம் இல்லை என்பதால் நாங்கள் பொதுவெளியில் எதுவும் பேசவில்லை, ஆனால் இப்பொழுது ஆதாரம் கிடைத்திருக்கிறது. எனது மகன்கள் சிறுவர்களை தாக்கியதாக கூறப்படும் நிலையில், 10 பேர் கொண்ட கும்பல் வண்டியில் வந்து எனது மகன்களை தாக்கும் வீடியோ இப்போது வெளியாகியிருக்கிறது. நிச்சயம் இந்த விஷயத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.