கூலி படப்பிடிப்பு பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஓணம் பண்டிகையை நடனம் ஆடி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேட்டையன் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்திற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாப்பாத்திரங்களின் பெயர்கள் கடந்த சில தினங்களாக வெளியாகி இணையத்தை ஆட்சி செய்து வந்தன. அந்த வரிசையில் பிரபல மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் முதல் முறையாக தமிழ் திரையுலகில் "கூலி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.
அதேபோல தமிழ் திரை உலகில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் "கூலி" திரைப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறார் தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனா. இவர்கள் தமிழில் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை என்றாலும் தெலுங்கு திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நாகார்ஜூனா இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல்வாதி வீட்டு மருமகள் ஆனார் மேகா ஆகாஷ்! பிரபலங்கள் புடைசூழ நடந்த திருமணம் - போட்டோஸ் இதோ
மேலும் உலக நாயன் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகளாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கதாபாத்திரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், படத்தில் ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளார் என்பதை மட்டும் படக்குழு உறுதிப்படுத்தி உள்ளது.
ஆத்தாடி ஒரு படத்துக்கு 275 கோடியா? இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் லிஸ்ட் இதோ
மேலும் சுமார் 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இந்த திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார் நடிகர் சத்யராஜ். கடந்த காலங்களில் ரஜினி, சத்யராஜ் இணைந்து பலப் படங்களில் நடித்திருந்தாலும் சுமார் 38 ஆண்டுகளாக இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.
Superstar celebrating Onam in style from the sets of 🔥💥 pic.twitter.com/VhVNhmS2hI
— Sun Pictures (@sunpictures)இதனிடையே கூலி படப்பிடிப்பு பணியின் போது நடிகர் ரஜினிகாந்த் ஓணம் பண்டிகையை முன்னிட்டு டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோவை படக்குழு வெளியிட்டு ஓணம் பண்டிகையை வைப் செய்துள்ளனர். அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் உற்சாகத்துடன் டான்ஸ் ஆட, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சக படக்குழுவினருடன் அந்த நடனத்தை பார்த்து ரசிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.