ஒருவழியா ஹீரோவை பைனல் பண்ணிட்டாரு - லைகா தயாரிப்பில் களமிறங்கும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்!

Jason Sanjay : பிரபல நடிகர் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தற்பொழுது கோலிவுட் உலகில் இயக்குனராக களமிறங்குகிறார்.

Thalapathy vijay son jason sanjay debuting as director see who is the hero ans

கடந்த 2000வது ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி பிறந்தவர் தான் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். சங்கீதா மற்றும் விஜய் என்ற பெயர்களின் கோர்வையே சஞ்சயின் பெயர் உருவாக காரணம். ஜேசன் சென்னையில் தான் தனது பள்ளி படிப்பை முடித்தார். அதன்பிறகு கனடா நாட்டிற்கு குடி பெயர்ந்த அவர், அங்கே தான் பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிறார். 

அது மட்டும் அல்லாமல் அங்கு திரைப்படம் தொடர்பான படிப்பில் அவர் அண்மையில் பட்டம் பெற்று முடித்தார். திரைக்கதை அமைப்பிற்கும் தனியாக அவர் பிஏ பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. லண்டனில் தனது படிப்பை இறுதியாக முடித்த ஜேசன் சஞ்சய், அங்குள்ள தனது நண்பர்களுடன் இணைந்து சில குறும்படங்களையும் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Latest Videos

கற்பைக் காப்பாற்ற போராடிய விஜய் & சூர்யா - மிஸ்டர் க்ளீன்னு சர்டிபிகேட் கொடுக்கும் பாடகி சுச்சி!

தந்தை விஜயின் படங்களில் இரண்டு முறை சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்த ஜேசன் சஞ்சய் இப்போது தமிழ் திரையுலகில் இயக்குனராக களம் இறங்குகிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்தை பிரபல லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது என்கின்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில், ஜேசன் இயக்கவிருக்கும் அந்த திரைப்படத்தில் நாயகனாக நடிக்க இருப்பது யார் என்கின்ற கேள்வி எழுந்து வந்தது. 

முதலில் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதன் பிறகு பெரிய அளவில் அவருடைய படம் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை. இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள தகவலின்படி தமிழ் சினிமாவில் நல்ல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன், ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் முதல் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

விரைவில் இந்த திரைப்பட பணிகள் துவங்கும் என்றும், அந்த திரைப்படத்தில் பணியாற்றியுள்ள முக்கிய கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி ரேஸில் விடாமுயற்சி? SKவுக்கு தலைவலி கொடுக்க வருகிறாரா தல? லேட்டஸ்ட் அப்டேட்!

vuukle one pixel image
click me!
vuukle one pixel image