
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பார்க்கிங் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக அவர் நடித்துள்ள படம் லப்பர் பந்து. இப்படத்தை தமிழரசன் பச்சைமுத்து என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார்.
மேலும் அடக்கத்தி தினேஷ், சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட், தேவதர்ஷினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... "நீங்க CWCல் பண்ணது தான் ரிட்டர்ன் வருது" இது தான் கர்மா மணிமேகலை - குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்!
லப்பர் பந்து திரைப்படம் விறுவிறுப்பான திரைக்கதை உடன் அருமையாக எழுதப்பட்டு உள்ளது. அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு சூப்பராக உள்ளது. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் படத்தை தூக்கி நிறுத்துகிறது. மொத்தத்தில் ஒர்த்தான படமாக லப்பர் பந்து உள்ளது. நல்ல கண்டெண்ட் உள்ள படம் எப்போதுமே ஜெயிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கண்டிப்பாக சொல்கிறேன் இந்த வருடத்தின் சிறந்த படமாக லப்பர் பந்து இருக்கும். அருமையாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். திருப்திகரமான படமாக இருக்கும். மிஸ் பண்ண கூடாத படமும் கூட. இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து மற்றும் அவரின் டீமுக்கும் வாழ்த்துக்கள் என பாராட்டி இருக்கிறார்.
பார்க்கிங் படத்துக்கு பின்னர் ஹரிஷ் கல்யாணின் ஸ்கிரிப்ட் செலக்ஷன் வேறலெவலில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து இருக்கிறார். லப்பர் பந்து படத்துக்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ் உள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறனே படத்தை பார்த்து மெர்சலாகி இருக்கிறார். முதல் பாதி சூப்பராகவும் இரண்டாம் பாதி அதைவிட சூப்பராகவும் இருப்பதாக கூறி உள்ள அவர், அடுத்து என்ன அடுத்து என்ன என திரைக்கதையை இயக்குனர் விறுவிறுப்பாக நகர்த்தி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். ப்ளூ சட்டை மாறனே வியந்து பாராட்டி இருப்பதால் படம் வேறலெவலில் இருக்கும் என நெட்டிசன்களும் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பல வகையில் வெடித்த சர்ச்சை.. சிம்பிளாக நடந்த "பயில்வானின்" மகள் திருமணம் - நேரில் வந்து வாழ்த்திய பிரபலங்கள்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.