ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் பணியாற்றி வரும் பிரபலம், கோவை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து போட்டுள்ள எக்ஸ் தள பதிவு வைரலாகிறது.
ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.கதிர். இதையடுத்து சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம், சமுத்திரக்கனியின் நாடோடிகள், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய நீ தானே என் பொன்வசந்தம், அஜித்தின் என்னை அறிந்தால், சூர்யாவின் ஜெய் பீம், விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல், வெங்கட் பிரபுவின் கஸ்டடி என பல்வேறு முன்னணி இயக்குனர்களின் படங்களில் பணியாற்றி உள்ளார் கதிர்.
அவர் தற்போது ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். வேட்டையன் படத்தை ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், சூசகமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தாக்கி போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Lok Shaba Election 2024: தமிழக முதலவர் ஸ்டாலின் முதல்... விஜய பிரபாகரன் வரை! வாக்களித்த அரசியல் பிரபலங்கள்!
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அன்புள்ள கோவை மக்களே... நல்லா குத்தி விட்றுங்க... இனிமே நம்ம ஊர் பக்கம் கூட வரக்கூடாது” என பதிவிட்டு ஜனநாயகம் காப்போம் என்கிற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டு இருக்கிறார். இதில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடாவிட்டாலும் அவர் அண்ணாமலையை தான் தாக்கி பேசியுள்ளார் என்பது அவரது எக்ஸ் தள பக்கத்தில் உள்ள மற்ற பதிவுகளை பார்த்தாலே தெரிகிறது.
Dear Coimbatorians… நல்லா குத்தி விட்றுங்க… இனிமே நம்ம ஊர் பக்கம் கூட வரக்கூடாது!!
— S.R.Kathir ISC (@srkathiir)இதுதவிர, கோயமுத்தூர் மக்கள்... ஆட்ட பிரியாணி போட ஆரவாரமா போய்கிட்டு இருக்காங்க என அண்ணாமலையை விமர்சித்து போடப்பட்டுள்ள மீமை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ரீ-ட்வீட் செய்திருக்கிறார் கதிர். அதுமட்டுமின்றி சூரியன்லயே பூத் வச்சாலும் உன்ன வீட்டுக்கு அனுப்பாம போக மாட்டோம் என மோடியை விமர்சித்து போடப்பட்டுள்ள பதிவையும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர்.
இதையும் படியுங்கள்... கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட ‘அரண்மனை 4’ ரிலீஸ் தேதி... போட்டியின்றி சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் ரத்னம்