
18 வது நாடாளுமன்ற தேர்தல் இன்று ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கியுள்ளது, முதல் கட்டமாக இன்று தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசைகளில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவருகின்றனர். பல்வேறு பிரபலங்களும் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், நடிகர் தனுஷ், நடிகர் விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தது வருகின்றனர். வெளிநாட்டில் இருந்த தளபதி விஜய் அவர்களும் இன்று தமிழகம் வந்து தனது வாக்கினை செலுத்தினர். கையில் சிறு காயத்துடன் காணப்பட்ட தளபதி விஜய் எதிர்வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களம்காணவுள்ளார்.
இந்நிலையில் மக்கள் செல்வர் விஜய் சேதுபதி அவர்கள் தனது வாக்கை செலுத்த வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த பொழுது, சக்கர நாற்காலியில் நடக்க முடியாமல் வந்த மூதாட்டி ஒருவர், அவரிடம் செல்ஃபி கேட்டிருக்கிறார். உடனே அவரிடமிருந்த செல்போனை வாங்கிக்கொண்டு, அவரோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார் அவர்.
மேலும் அவர் வயது முதிர்ந்தவர் என்பதால், அவர் காலை தொட்டு வணங்கிய விஜய் சேதுபதி அவரோடு Selfie எடுத்துமகிழ்ந்தார். அருகில் இருந்த மக்களும் அவருடன் கைகுலுக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மக்கள் செல்வன் நடிப்பில் மகாராஜா, Train உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் விஜய்சேதுபதி, இப்பொது பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்து வருகின்றார். குறிப்பாக கேமியோ கதாபாத்திரங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலும் ஒதுங்கியே இருக்கின்றார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. முதல் முறையாக மிஸ்க்கின் இயக்கத்தில் train என்ற படத்தில் அவர் நடிக்கின்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.