நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் வாக்களிக்க வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 21 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: Rajinikanth: ஸ்டெல்லா மேரில் கல்லூரியில் வாக்களித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
இந்நிலையில், காலை முதலே தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். அதேபோல், சினிமா பிரபலங்களான ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சசிகுமார் உள்ளிட்டோர் தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வாக்களிக்க வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன காரணம் என்றால் 'GOAT' இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக துபாய் சென்ற நடிகர் விஜய், தேர்தலில் வாக்களிப்பதற்காக தமிழகத்திற்கு வரவிருந்த நிலையில், அங்கு பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அவரது பயணத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று காலை விமான சேவையை பொறுத்து அவர் தமிழகத்திற்கு வரும்பட்சத்தில் வாக்களிக்க வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வாக்குச்சாவடி.. செல்லில் பேசியபடி சென்ற கெளதம் கார்த்திக்.. நீங்களே இப்படி செய்யலாமா? கோவத்தில் நெட்டிசன்ஸ்!