Rajinikanth: ஸ்டெல்லா மேரில் கல்லூரியில் வாக்களித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

By manimegalai a  |  First Published Apr 19, 2024, 8:36 AM IST

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கெளதம் கார்த்திக், கார்த்திக்  ஆகியோர், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
 


நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இதில் இன்று முதல் கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.

இன்று காலை முதலே பொதுமக்கள், பிரபலங்கள், மற்றும் அரசியல் வாதிகள் பலர் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரில் கல்லூரியில் தன்னுடைய வாக்கினை செலுத்தியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Tap to resize

Latest Videos

Breaking: தமிழகத்திலேயே முதல் ஆளாக வந்து வாக்களித்தார் நடிகர் அஜித்!

அதே போல் இதே வாக்குச்சாவடியில் நடிகர் கெளதம் கார்த்திக், கார்த்திக் ஆகியோரும் வாக்களித்துள்ளனர். ஸ்டெல்லா மேரில் கல்லூரியில் காலை 7 மணிக்கு ஓட்டு பதிவு துவங்கிய நிலையில், வாக்களிக்கும் இயந்திரத்தில் திடீர் என பிரச்சனை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அதிகாரிகள், வாக்கு  இயந்திரத்தில் உள்ள பிரச்னையை சரி செய்த பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு துவங்கியது குறிப்பிடத்தக்கது. காலையில் இருந்தே தொடர்ந்து பல பிரபலங்கள் பொதுமக்களுடன் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் வாக்களிக்கும் வாக்கு சாவடியில் திடீர் என நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு! என்ன ஆச்சு?

click me!