Viduthalai Movie: வெற்றிமாறனின் 'விடுதலை' படத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்! குவியும் வாழ்த்துக்கள்!

Published : Jan 23, 2024, 08:39 PM IST
Viduthalai Movie: வெற்றிமாறனின் 'விடுதலை' படத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்! குவியும் வாழ்த்துக்கள்!

சுருக்கம்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 1மற்றும் 2 பாகங்கள்  புனே சர்வதேச திரைப்பட விழாவில் (PIFF) வெளியிட தேர்வாகியுள்ளது.  

கடந்த 2007 ஆம் ஆண்டு, தனுஷ் நடிப்பில் வெளியான "பொல்லாதவன்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன்னுடைய எதார்த்தமான படைப்பால் திரும்பி பார்க்க வைத்தவர் வெற்றிமாறன். அதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தனுஷை மீண்டும் நாயகனாக வைத்து இயக்கிய 'ஆடுகளம்' தனுஷுக்கு தேசிய விருதை பெற்று தந்தது. 

இந்த படத்தை தொடர்ந்து, விசாரணை, வட சென்னை, அசுரன், போன்ற படங்களை இயக்கினார். கடைசியாக இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. ஜெயமோகனின் 'துணைவன்' கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், சூரி ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வாத்தியார் என்கிற போராளியாகவும் நடித்திருந்தார். ஜிவி பிரகாஷின், தங்கை பவானி ஸ்ரீ ஹீரோயினாக நடித்திருந்தார்.

 நான் PR மூலமா தான் ஜெயிச்சேன்! இந்த ட்விஸ்டை எதிர்பாக்கல.. மாயா - பூர்ணிமாவுக்கு பளார் பதிலடி கொடுத்த அர்ச்சனா

தற்போது இந்த படத்தின், வெற்றியை தொடந்து வெற்றிமாறன் இரண்டாவது பாகத்தை இயக்கி முடியுள்ளார். இப்படம் இந்த ஆண்டு கோடை நாட்களை குறிவைத்து வெளியாக உள்ளது. 'விடுதலை' படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, இப்படம் பல்வேறு விருது விழாக்களில் கலந்து கொண்டு... பரிசையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Nadiya Daughters Photo: அழகில் அம்மாவை மிஞ்சிய நதியாவின் மகள்கள்.. ஹீரோயின் போல் இருக்கும் ரீசென்ட் போட்டோஸ்!

அந்த வகையில் ஜனவரி 31 அன்று நடைபெற இருக்கும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை I & II’  திரையிடப்படத் தேர்வாகியுள்ளது.  இதை தொடர்ந்து புனேவில் நடைபெற்ற புனே சர்வதேச திரைப்பட விழா (PIFF) 2024-ல் சிறப்புத் திரையிடலின் போது ’விடுதலை1’ சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இது படக்குழுவினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

25 புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்கள் மீது ரூ.4,000 கோடி முதலீடு... ஜியோஹாட்ஸ்டார் அதிரடி
மதுரை, மலப்புரம், மாண்டியாவிலிருந்து வரும் படங்களே உண்மையான தேசிய கலாச்சார சின்னங்கள்: கமல்ஹாசன் புகழாரம்