Actress Nivetha Pethuraj : பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் பேட்மிண்டன் போட்டிகளில் கலந்துகொண்டு அதில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
மதுரையில் பிறந்த நிவேதா பெத்துராஜ் தனது இளம் வயதிலேயே துபாய்க்கு குடிபெயர்ந்தார். அதன் பிறகு மாடலிங் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற "மிஸ் இந்தியா வேர்ல்ட் வைட்" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று டாப் 5 ஃபைனலிஸ்டாக வந்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் அதே ஆண்டு நடந்த "மிஸ் இந்தியா யுஏஇ" போட்டிகளில் இவர் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.
தனது பட்டப் படிப்பை எடின்பெர்க் நகரில் முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "ஒரு நாள் கூத்து" என்கின்ற திரைப்படத்தில் நடித்து தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு இப்போது வரை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இறுதியாக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான "Boo" என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழில் பிரபுதேவா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான "பொன்மாணிக்கவேல்" என்ற திரைப்படத்தில் கதையின் நாயகியாக இவர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. சைமா உள்ளிட்ட பல விருதுகளை சிறந்த நடிகை பிரிவில் நிவேதா பெற்றுள்ளார்.
நிவேதாவுக்கு விளையாட்டிலும் பெரிய அளவில் ஆர்வம் இருந்து வந்தது. இந்த சூழலில் பேட்மிட்டன் போட்டியில் அவர் பங்கு பெற துவங்கினார். தற்போது மாநில அளவில் நடைபெற்ற பேட்மிட்டன் போட்டிகளில் தற்போது சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார்.