பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா.. நீரில் மூழ்கி இறந்த மகள் - மன பாரத்தோடு வாழ்த்து சொன்ன சின்னக்குயில் சித்ரா!

Ansgar R |  
Published : Dec 19, 2023, 09:07 AM IST
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா.. நீரில் மூழ்கி இறந்த மகள் - மன பாரத்தோடு வாழ்த்து சொன்ன சின்னக்குயில் சித்ரா!

சுருக்கம்

Singer Chitra Daughter : தமிழ் மட்டுமல்லாமல் சுமார் 19 மொழிகளில் 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை படி பல விருதுகளை பெற்று புகழின் உச்சியில் உள்ள பாடகி தான் சின்னக்குயில் சித்ரா என்றால் அது மிகையல்ல. 

கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர்களின் "சிந்து பைரவி" என்கின்ற திரைப்படத்தில் வந்த "நான் ஒரு சிந்து" என்கின்ற பாடலின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான பாடகி தான் கே.எஸ் சித்ரா. சுமார் 38 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் சித்ரா தமிழ் மொழியில் மட்டும் சுமார் 2000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். 

அதே போல தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஒடியா, பெங்காளி, பஞ்சாபி, குஜராத்தி, துளு, ராஜஸ்தானி, உருது சான்ஸ்கிரிட் மற்றும் படுகா உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், அது மட்டுமல்லாமல் வெளிநாட்டு மொழிகளான மலாய், லத்தின், அரபிக், சிங்களம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட மொழிகளில் 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உலக புகழ்பெற்ற பாடகி.

ஹனிமூன் கொண்டாட காதலர்களின் கனவு தேசத்துக்கு சென்ற ராதா மகள் கார்த்திகா நாயர் - வைரலாகும் போட்டோஸ்

அதேபோல கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆறு முறை தேசிய விருதுகளை வென்ற ஒரு மாபெரும் பாடகி தான் கே.எஸ் சித்ரா. உலக அளவில் மிகப்பெரிய பாடகியாக திகழ்ந்துவரும் சித்ரா அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் சோக நிகழ்வு ஒன்று நடைபெற்றது, அது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியது.  

இசை புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் நடத்திய ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் துபாய் சென்றிருந்தபோது, அவரது பிஞ்சு மகள் நந்தனா தவறுதலாக நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தார். இந்நிலையில் அவர் இறந்து சுமார் 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பாடகி சித்ரா தனது மகள் நந்தனாவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து நேற்று அவருக்காக ஒரு பதிவினை தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் "நந்தனா எங்கள் இதயத்தில் நீ ஒரு மிகப்பெரிய வடுவை ஏற்படுத்தி சென்று விட்டாய், ஒவ்வொரு நாளும் உன்னை நான் மிஸ் செய்கிறேன். ஹாப்பி பர்த்டே நந்தனா என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!