"தளபதி மேல் கொஞ்சம் கோபம்.. ஆனால் அவர் சொன்ன வார்த்தை".. சண்டக்கோழி இன்சிடென்ட் - மனம் திறந்த லிங்குசாமி!

Ansgar R |  
Published : Dec 18, 2023, 07:10 AM IST
"தளபதி மேல் கொஞ்சம் கோபம்.. ஆனால் அவர் சொன்ன வார்த்தை".. சண்டக்கோழி இன்சிடென்ட் - மனம் திறந்த லிங்குசாமி!

சுருக்கம்

Lingusamy About Vijay : பிரபல இயக்குனர் லிங்குசாமி தற்போது பையா படத்தின் இரண்டாம் பாகத்தை மூத்த மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனை வைத்து இயக்கவுள்ளார்.

பிரபல இயக்குனர் லிங்குசாமி, மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆன மம்மூட்டியை வைத்து இயக்கி வெளியிட்ட திரைப்படம் தான் ஆனந்தம். கடந்த 2001 ஆம் ஆண்டு அவர் தமிழ் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கினார். அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பெரிய அளவில் ஹிட்டானது. 

குறிப்பாக நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான "ரன்", தல அஜித் நடிப்பில் வெளியான "ஜி", அதனைத் தொடர்ந்து விஷாலின் நடிப்பில் வெளியான "சண்டக்கோழி", விக்ரமின் "பீமா" மற்றும் கார்த்தியின் "பையா" என்று பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு தல அஜித் அவர்களை வைத்து ஜி என்ற வெற்றி திரைப்படத்தை லிங்குசாமி கொடுத்த நிலையில் அதே ஆண்டு தளபதி விஜய் மற்றும் ஜோதிகா ஆகிய இருவரை வைத்து அவர் உருவாக்க துவங்கிய கதை தான் சண்டக்கோழி.

மிக்ஜாம் புயல்.. நிவாரண நிதியாக பெரும் தொகை கொடுத்த 'டிமான்டி காலனி 2' படக்குழு - தம்பிக்கு நன்றி சொன்ன உதய்! 

ஆனால் ஒரு கட்டத்தில் விஜய் அந்த படத்தில் நடிக்க மறுக்க, விஷாலும், மீரா ஜாஸ்மின்னும் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த சூழ்நிலையில் அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள லிங்குசாமி பேசுகையில் "சண்டக்கோழி பட வெற்றி விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர், அப்பொழுது தளபதி விஜய் அவர்களும் அங்கு வந்திருந்தார். தூரத்தில் ஓரமாக நின்று கொண்டிருந்த என்னை கண்டதும் நேரடியாக என்னிடம் வந்து "அண்ணா படம் சூப்பர், குறிப்பாக செகண்ட் ஆப் வேற லெவலில் இருந்தது என்று பாராட்டினார்". 

ஆனால் அவர் மீது எனக்கு ஒரு சிறு கோபம் இருந்தது, நான் அவரிடம் அண்ணா நீங்கள் என்னிடம் இரண்டாம் பாக கதையை கேட்கவே இல்லை, என்று நான் கூறி வருத்தப்பட்டேன். சற்று என்று எதையும் யோசிக்காமல் அந்த பையன் தமிழ் திரையுவதற்கு வர வேண்டும் என்று இருக்கிறது. அவர் நடித்ததால் தான் இந்த படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆக மாறி உள்ளது. நீங்கள் சரியான தேர்வைதான் அண்ணா செய்திருக்கிறீர்கள் என்று கூறி என்னை வெகுவாக பாராட்டினார் விஜய். 

நடிகர் சின்னி ஜெயந்தின் மகனா இது.. கிராம மக்களிடம் எளிமையாக இருக்கும் ஸ்ருதன் ஜெய் நாராயணன்..

ஒரு பட வாய்ப்பு சரியான நபருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் மிக கவனமாக இருப்பவர் தளபதி விஜய் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று கூறி அவரை மனதார பாராட்டி உள்ளார் லிங்குசாமி. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பொறுமையை சோதிக்கப்போகிறாரா விஜய்...? ஜன நாயகன் ரன் டைம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
டிஸ்சார்ஜ் ஆகும் ஈஸ்வரி... களத்தில் இறங்கி சம்பவம் செய்ய தயாராகும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்