Latest Videos

Cinema : அப்போ எனக்கு வயசு 22 தான்.. தனியே அழைத்த ஹீரோ.. சினிமாவின் Dark Side - மனம் திறந்த "விஜயின் நாயகி"!

By Ansgar RFirst Published Jun 21, 2024, 10:22 PM IST
Highlights

Kollywood Actress : சினிமா உலகம், வெளியிலிருந்து பார்ப்பதற்கு பளபளவென இருந்தாலும், அதற்குள்ளும் சில கருமையான பக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது என்பதை, எவராலும் மறுக்க முடியாது. 

மும்பையில் நடந்த 1976ம் ஆண்டு பிறந்த நடிகை தான் இஷா கோப்பிகர், அவருக்கு இப்போது வயது 47. கடந்த 1997ம் ஆண்டு முதல் இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த 27 ஆண்டுகளாக கலைத்துறையில் பயணித்து வரும் இவர், இறுதியாக தமிழில் இந்த 2024ம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் "அயலான்" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். 

தமிழில் கடந்த 1998ம் ஆண்டு வெளியான டாப் ஸ்டார் பிரசாந்தின் "காதல் கவிதை" என்ற படம் தான் இவர் தமிழில் அறிமுகமான திரைப்படம். தளபதி விஜயோடு "நெஞ்சினிலே" என்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். தமிழ், கன்னடம், தெலுங்கு என்று பல இந்திய மொழிகளில் அவர் நடித்திருந்தாலும். கடந்த 1998வது ஆண்டு முதல் அவர் அதிக அளவில் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

"உழைக்க வேண்டாம்.. குடிகாரனா இருந்தா போதும்.. இது தான் கேடு கெட்ட திராவிட மாடல்" - பீஸ்ட் மோடில் கஸ்தூரி!

இந்நிலையில் பாலிவுட் உலகின் கருமையான பக்கங்கள் குறித்தும், தன்னுடைய இளம் வயதில் அவர் சந்தித்த சில கசப்பான அனுபவங்கள் குறித்தும் அவர் பேசியுள்ளார். அண்மையில் ஒரு பேட்டியில் பங்கேற்று பேசிய இஷா கோப்பிகர், "எனக்கு அப்பொழுது 22 அல்லது 23 வயது தான் இருக்கும், சினிமா துறைக்கு வந்த புதிதில்,பாலிவுட் திரைப்படங்களில் நான் நடிக்க தொடங்கினேன்". 

"அப்பொழுது முன்னணி நடிகர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு, என்னை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கூறினார். என்னுடன் எனது கார் ஓட்டுநர் கூட வரக்கூடாது என்று கண்டிப்பாக கூறினார். ஆனால் ஏற்கனவே அவரைப் பற்றி சில விஷயங்களை நான் அறிந்திருந்த நிலையில், அன்று அவரை சந்திக்க நான் மறுத்து விட்டேன்". 

"அதேபோல நான் நடிக்க துவங்கிய புதிதில், எனக்கு ஒரு 18 வயது இருக்கும், அப்போது ஒரு நடிகையும், அவருடைய PA ஒருவரும் என்னை அழைத்து, நடிகர்களிடம் கொஞ்சம் நெருக்கமான நட்போடு பழகிக்கொள், அப்பொழுது தான் உனக்கு வேலை கிடைக்கும் என்று கூறினார்கள். நட்போடு பழகுவது சரி, அது என்ன நெருக்கமான நட்பு என்பது எனக்கு அப்போது எனக்கு புரியவில்லை". 

அப்போதுதான் பிரபல நடிகை இத்தா கபூர் எனக்கு பல விஷயங்களை புரிய வைத்தார். திமிரோடு நடந்து கொள்ள அவர் தான் எனக்கு கற்றுக் கொடுத்தார். அந்த கசப்பான அனுபவங்களில் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்" என்று கூறியிருக்கிறார் நடிகை இஷா கோபிக்கர். 

Ramarajan: குடிகளுக்கு ஏன் குடி? விஷச்சாராய மரணத்தால் கொதித்தெழுந்த ராமராஜனின் வேதனை அறிக்கை!

click me!