நான் உயிரோடு தான் இருக்கிறேன்.! வதந்திக்கு எதிராக FIR பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை வீணா கபூர்!

Published : Dec 15, 2022, 04:44 PM ISTUpdated : Dec 15, 2022, 05:21 PM IST
நான் உயிரோடு தான் இருக்கிறேன்.! வதந்திக்கு எதிராக FIR பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை வீணா கபூர்!

சுருக்கம்

பழம்பெரும் நடிகை வீணா கபூரை, அவரது மகன் சொத்து பிரச்சனை காரணமாக கொலை செய்துவிட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், இது முற்றிலும் வதந்தி என்று கூறி, இந்த வதந்தியை பரப்பியவர்கள் மீது காவல் நிலையத்தில் வீணா கபூர் FIR பதிவு செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


பல்வேறு இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர் 72 வயதாகும் வீணா கபூர். இந்நிலையில் கடந்த வாரம், வீணா கபூரை அவருடைய மூத்த மகன், சொத்து பிரச்சனை காரணமாக கொலை செய்து விட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் சமூக வலைத்தளத்திலும் படு வேகமாக பரவிய நிலையில், இது முற்றிலும் வதந்தி என்றும், தான் உயிருடன் இருப்பதாக அவரே அறிவித்துள்ளது மட்டும் இன்றி, இதுகுறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது திண்டோஷி காவல் நிலையத்தில் FIR பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ள வீணா கபூர்,  "இது முற்றிலும் பொய்யான தகவல், வீணா கபூர் கொல்லப்பட்டார் என்பது உண்மை தான். ஆனால், அந்த வீணா கபூர் நான் அல்ல. அது வேறு ஒரு நபர். தற்போது நான் ஜூகுவில் வசிக்கவில்லை. தன்னுடைய மகனுடன்  கோரேகானில் வசித்து வருகிறேன். நான் என் மகனுடன் வசித்து வருவதால் அப்படி மக்கள் நினைத்து விட்டார்கள். 

பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி சீரியல் ஹீரோயின்..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

அதே போல் சில செய்தி நிறுவனங்கள், உண்மை என்ன என்பதை முழுமையாக விசாரிக்காமல்... வதந்திகளை பரப்பி விட்டனர். ஆனால் நான் நலமாக இருக்கிறேன். யாரும் இப்படி வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். அதே போல் இவருடைய மகனும் இந்த செய்தி தங்களை மிகவும் பதித்ததாகவும், போலீசார் தங்களுக்கு முழு ஆதரவு அளித்ததாக கூறியுள்ளார். 

மேலும் தற்போது நடிகை வீணாவின் மரணம் குறித்து அவதூறுகளை பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டோஷி காவல் நிலையத்தில் FIR பதிவு செய்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மகனால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நடிகை தற்போது திடீர் என நலமுடன் இருப்பதாக கூறியுள்ளது, பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை நிம்மதியடை செய்துள்ளது.

பிரியா பவானி ஷங்கர் நடித்த 'கல்யாணம் முதல் காதல் வரை'... 'ஈரமான ரோஜாவே 2' சீரியல் பிரபலம் அதிர்ச்சி மரணம்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!