அழிவை நோக்கி நகரும் இந்தி சினிமா... காந்தாரா, கேஜிஎப் 2 தான் காரணமா? - பாலிவுட் இயக்குனர்கள் மோதல்

Published : Dec 15, 2022, 03:25 PM IST
அழிவை நோக்கி நகரும் இந்தி சினிமா... காந்தாரா, கேஜிஎப் 2 தான் காரணமா? - பாலிவுட் இயக்குனர்கள் மோதல்

சுருக்கம்

காந்தாரா, கே.ஜி.எஃப் 2, புஷ்பா போன்ற பிரம்மாண்ட படங்களைப் பார்த்து அதே போன்று மிகப்பெரிய பொருட்செலவில் படங்களை எடுக்க முயல்வது தான் பாலிவுட்டை அழிவை நோக்கி அழைத்து செல்வதாக அனுராக் கஷ்யப் பேசி இருந்தார். 

தனியார் யூடியூப் சேனல் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரவுண்ட் டேபிள் என்கிற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது. அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளையும் சேர்ந்த திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில், இந்தி திரையுலகில் இருந்து கரண் ஜோகர், வருண் தவான் மற்றும் இயக்குனர் அனுராக் கஷ்யப் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது அதில் பேசிய அனுராக் கஷ்யப் காந்தாரா, கே.ஜி.எஃப் 2, புஷ்பா போன்ற பிரம்மாண்ட படங்களைப் பார்த்து அதே போன்று மிகப்பெரிய பொருட்செலவில் படங்களை எடுக்க முயல்வது தான் பாலிவுட்டை அழிவை நோக்கி அழைத்து செல்வதாக குறிப்பிட்டு இருந்தார். அவரின் இந்த பேச்சு பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... வெளிநாடுகளில் புக்கிங் ஆரம்பம்! மாஸ் காட்டும் வாரிசு... தடுமாறும் துணிவு - முன்பதிவு வசூல் நிலவரம் இதோ

அனுராக் கஷ்யப்பின் இந்த பேச்சுக்கு பாலிவுட் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி அனுராக் கஷ்யப் பேசியதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், அனுராக்கின் பெயரை குறிப்பிடாமல் பாலிவுட்டின் முக்கிய இயக்குனர் இப்படி பேசி இருப்பதற்கு நான் உடன்படவில்லை. உங்களது கருத்தை கூறுங்கள் என தனது ரசிகர்களிடமும் கருத்து கேட்டுள்ளார். 

இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி, இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற தி காஷ்மீர் பைல்ஸ் என்கிற திரைப்படத்தை இயக்கிவர் ஆவார். அதேபோல் பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் அனுராக் கஷ்யப், தமிழில் இமைக்கா நொடிகள் என்கிற படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்... இதில் திரையிட தேர்வான 15 தமிழ் திரைப்படங்கள் என்னென்ன?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?