பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்...வறுமையின் பிடியிலிருந்து விடுவித்த மரணம்

Kanmani P   | Asianet News
Published : Apr 29, 2022, 05:46 PM ISTUpdated : Apr 29, 2022, 06:27 PM IST
பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்...வறுமையின் பிடியிலிருந்து விடுவித்த மரணம்

சுருக்கம்

பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். பிரபல நடிகர்களாக இருக்கும் பலரும் வறுமையின் கொடூரத்தில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

அன்னூர் தெலுங்குபாளையத்தை சார்ந்த ரங்கம்மாள் பாட்டி எம்ஜிஆர் போன்ற தமிழில் உச்ச நட்சத்திரங்களாக இருந்த நடிகர்களுடன்   நடித்துள்ளார். வடிவேலுவின் பிரபல காமெடிகளில்  ஒன்றான "ந்தா அந்த நாயைக் கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ" என்று சொல்லும் ரங்கம்மா பாட்டி நடிப்பின் மூலம் பாராட்டுப் பெற்றவர். தள்ளாத வயதிலும் டைலாக்கை மறக்காமல் பேசும்திறன் கொண்டவர் ரெங்கம்மா பாட்டி. 

500க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் தோன்றியுள்ளார். மிக வயது முதிர்ந்த இவருக்கு போதுமான  பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கிடையே கடந்த 2018 -ம் ஆண்டு  மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று பிழைப்பை நடத்தி வந்த இவரை கடந்த யூட்யூப்பர் போட்ட பதிவை அடுத்து   நடிகர் சங்கம் உதவி தொகையாக ரூ. 5000 த்தை  ரங்கம்மாள் பாட்டிக்கு வழங்கியது.  

பின்னர் மிகுந்த  சிரமத்தில் இருந்த இவர் தனது சொந்த திரும்பினார். உடல்நிலை மிகவும் குன்றிய நிலையில் அவ்வப்போது தனது நடிப்பை காணொளியில் பார்த்து ரசித்து வரும் ரங்கம்மா பாட்டி சமீபத்தில் சோசியல் மீடியா ஒன்றிற்கு கொடுத்த பேட்டி வைரலானது.

இந்நிலையில்  மீண்டும் நடிக்க தயாராகி வருவதாக கூறியிருந்த ரங்கம்மாள் பாட்டி சொந்த ஊருக்கு திரும்பிய சில மாதங்களில் உயிரிழந்து விட்டார். பிரபல நடிகர்களாக இருக்கும் பலரும் வறுமையின் கொடூரத்தில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!