Vaali Movie Remake : வாலி இந்தி ரீமேக் கன்பார்ம் ... எஸ்.ஜே சூர்யாவின் கைவிட்டு போன முதல் படைப்பு

By Kanmani P  |  First Published Apr 29, 2022, 4:54 PM IST

 Vaali Movie Remake : வாலி இந்தி ரீமேக் குறித்து போனி கபூருக்கு எதிராக எஸ்.ஜே சூர்யா உச்சநீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடியானது.


கடந்த1999ஆம் ஆண்டு  எஸ். ஜே. சூர்யா தனது முதல் படைப்பாக  இயக்கிய படம் வாலி.  அன்றைய காதல் மன்னன் அஜித், இடுப்பழகி சிம்ரன் என பிரபல நட்சத்திரங்களை முதல் படத்திலேயே களமிறக்கி இருந்தார் எஸ்.ஜே சூர்யா. அஜித் நாயகன்,வில்லன் என இரட்டை சகோதர வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.  இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. இதற்கு தேவா இசையமைத்திருந்தார்.

Tap to resize

Latest Videos

மாறுபட்ட கதையோடு என்ட்ரி கொடுத்த எஸ்.ஜே சூர்யா முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்தி கொண்டார். இவரின் கனவு படமாக இருந்த வாலி  ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை பட தயரிப்பாளர் போனி கபூர் வாங்கியுள்ளார்.

ஆனால் தனது முதல் படத்தை தானே இயக்க வேண்டும் என எஸ்.ஜே சூர்யா முடிவு செய்ததை அடுத்து, இடர்க்கு தீர்வு காண நீதிமன்றத்தை அணுகினார். அவர் தாக்கல் செய்த மனுவின் படத்தின் கதை, திரைக்கதை அதை எழுதியவருக்கே சொந்தம் என்ற அடிப்படையில் இதை இந்தியில் ரீமேக் செய்ய போனிகபூருக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

போதிய ஆதாரம் இல்லை என கூறிய உயர்நீதி மன்றம் போனி கபூருக்கு ரீமேக் செய்ய இடைக்கால அனுமதி வழங்கியது. இதைதொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஜே சூர்யா மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை இன்று உச்சநீதிமன்ற  நீதிபதி எம்ஆர் ஷா முன்னிலையில் விசாரிக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற விசாரணையில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றுக்கூறி எஸ்ஜே சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
 

click me!