Samantha Post: காதலின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை...நெட்டிசனின் கேள்விக்கு நெத்தியடி பதில் தந்த சமந்தா...

Published : Apr 29, 2022, 03:25 PM IST
Samantha Post: காதலின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை...நெட்டிசனின் கேள்விக்கு நெத்தியடி பதில் தந்த சமந்தா...

சுருக்கம்

Samantha Post: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆண்டு தமிழில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆண்டு தமிழில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர்.

சமந்தாவின் ஆரம்ப கால பயணம்:

இதையடுத்து, இவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர, அதர்வாவின் பாணாகாத்தாடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர். பின்னர், பாகுபலி ஆர். ஆர்.ஆர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நான் ஈ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

 

முன்னணி நடிகர்களுடன் ஜோடி:

சமந்தா, தமிழில் முன்னணி நாயகர்களான சூர்யா, விஜய் உள்ளிட்டவர்களுடன் ஜோடியாக நடித்து  ஹிட் கொடுத்தவர்.  இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு, தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை 7 வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

நாக சைதன்யா- சமந்தா திருமணம்

34 வயதே ஆகும் சமந்தா, திருமணத்திற்கு பிறகு, வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தார். குறிப்பாக, இவரது நடிப்பில் வெளியான ஓ பேபி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்கள்  சமந்தாவிற்கு  இந்தியா நாயகியாக அந்தஸ்தை பெற்று தந்தது.

நாக சைதன்யா- சமந்தா விவாகரத்து:

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்கை, யார் கண்ணு பட்டதோ...திடீரென கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி தாங்கள் இருவரும் பிரிவதாக விவாகரத்தை அறிவித்தார்.

சமந்தா கவர்ச்சி பக்கம்:

அதற்கு பிறகு, சமந்தா சினிமாவில் கவர்ச்சி பக்கம் அதிகம் கவனம் செலுத்த தொடங்கி விட்டார், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ''ஓ சொல்றியா மாமா'' பாடல் பட்டி தோட்டி எங்கும் பரவி இளசுகளின் மனதை கொள்ளை கொண்டது.

காத்துவாக்குல ரெண்டு காதல்:

இதையடுத்து, அவரது கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது போல், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது. சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் சேர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்துள்ளார். அந்த படம் நேற்று முதல் திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. 

சமந்தா பிறந்தநாள்"

தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் அவர் ஒரு படத்திற்கு 3 கோடி ருபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சமந்தாவிற்கு ரசிகர்கள் பலர்  வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்த சமந்தா  தற்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.

மேலும் படிக்க...படத்தில் விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்...ரிலீசுக்கு பிறகு முதல் முறையாக போட்ட ட்விட் ...

ரசிகர்களின் கேள்விகளுக்கு சமந்தா பதில்:

அப்படி ரசிகர் ஒருவர் "ஒரே நேரத்தில் இவ்வளவு வெறுப்பையும், இவ்வளவு அன்பையும் பெறுவதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்" என கேட்டுள்ளார். அதற்கு சமந்தா "நான் அன்பையோ வெறுப்பையோ வாங்காமல் இருக்க முயற்சி செய்கிறேன். எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பான தூரத்தில் இருங்கள்" என பதிலளித்துள்ளார்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மர்ம மரணம்... கடைசியாக வெளியிட்ட வீடியோவில் காத்திருந்த அதிர்ச்சி
Vijay- Trisha : மீண்டும் திரிஷா உடன் பயணம்...! வைரலாகும் விஜய் டிக்கட் உண்மையா?