Naga Chaitanya : சமந்தா பிறந்தநாளன்று நாக சைதன்யா கொடுத்த டபுள் சர்ப்ரைஸ்

Published : Apr 29, 2022, 03:03 PM IST
Naga Chaitanya : சமந்தா பிறந்தநாளன்று நாக சைதன்யா கொடுத்த டபுள் சர்ப்ரைஸ்

சுருக்கம்

Naga Chaitanya : விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா கொண்டாடிய முதல் பிறந்தநாள் என்பதால், எதிர்பார்த்தபடி அவருக்கு நாக சைதன்யா எந்தவித வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. 

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது திருமண உறவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது. இருவருக்குமிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்தனர்.

விவாகரத்துக்கு அறிவிப்புக்கு பின்னர் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். நடிகை சமந்தா கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஏராளமான மொழிகளில் நடித்து வருகிறார். அதேபோல் நடிகர் நாக சைதன்யாவும் பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா நேற்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடினார். விவாகரத்துக்கு பின் அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், எதிர்பார்த்தபடி அவருக்கு நாக சைதன்யா எந்தவித வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் நாக சைதன்யா, தான் நடிக்கும் வெப் தொடர் மற்றும் படத்தின் அப்டேட்டை நேற்று வெளியிட்டுள்ளார்.

அவர் நடிக்கும் தூதா என்கிற வெப் தொடர் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த தொடரை விக்ரம் குமார் இயக்குகிறார். திகில் கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடரில் நாக சைதன்யாவுடன் பிரபல மலையாள நடிகை பார்வதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

அதேபோல் அவர் நடிக்கும் பாலிவுட் படமான லால் சிங் சட்டா படத்தில் இருந்து 2-வது பாடலும் நேற்று தான் வெளியிடப்பட்டது. அமீர்கான் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவரது நண்பனாக நாக சைதன்யா நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... அஜித் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் டிரீட்... ரெண்டுமே வேறலெவல் அப்டேட் மிஸ் பண்ணீடாதிங்க

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Sara Arjun : விக்ரமின் ரீல் மகளா இது? அடேங்கப்பா! கவர்ச்சி உடையில் என்னமா போஸ் கொடுக்குறாங்க..
Shivani Narayanan : எல்லாமே அப்படியே தெரியுது! சேலையில் கிளாமர் காட்டும் ஷிவானி நாராயணன் கிளிக்ஸ்