பூரண நலத்துடன் வீடு திரும்பினார் அமிதாப் பச்சன்.. என்ன நடந்தது? - ரசிகர்களுக்காக அவர் போட்ட ட்வீட் வைரல்!

Ansgar R |  
Published : Mar 15, 2024, 08:38 PM IST
பூரண நலத்துடன் வீடு திரும்பினார் அமிதாப் பச்சன்.. என்ன நடந்தது? - ரசிகர்களுக்காக அவர் போட்ட ட்வீட் வைரல்!

சுருக்கம்

Amitabh Bachchan : பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். 

பாலிவுட் திரை உலகில் கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்த வருபவர் தான் அமிதா பச்சன். கடந்த 1969 ஆம் ஆண்டு வெளியான ஒரு பாலிவுட் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அமிதாபச்சன், தான் நடித்த முதல் திரைப்படத்திற்காக தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஒரு சிறந்த ரோல் மாடலாக இன்றளவும் திகழ்ந்து வருபவர் அமிதாபச்சன் என்றால் அது மிகையல்ல. கடந்த 54 ஆண்டுகளில் முதல் முறையாக தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "வேட்டையன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகிறார் அமிதாபச்சன்.

கோலிவுட்டில் மீண்டும் ஒரு Fantasy Adventure படம்.. யோகி பாபு & வேதிகா இணையும் "கஜானா" - மிரட்டும் டீசர் இதோ!

தற்பொழுது 81 வயது நிரம்பிய அமிதாபச்சனுக்கு நேற்று ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய காலில் ஏற்பட்ட ஒரு ரத்தக்கட்டு காரணமாக அமிதாபச்சனுக்கு Angioplasty சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அவருக்காக ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டனர். 

இந்த நிலையில் தற்போது பூரண நலம் பெற்று வீடு திரும்பி உள்ளார் அவர், மேலும் தனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைத்து ரசிகர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். அவருடைய வீட்டின் அருகே கூடியிருந்த பல நூறு கணக்கான ரசிகர்கள் முன் சென்று தன்னுடைய நன்றிகளை அவர் தெரிவித்தார்.

"அப்போ இவருக்கும் வயசாகும் போல".. வெளியான ஜாக்கி சானின் லேட்டஸ்ட் போட்டோ - லைக்குகளை குவிக்கும் 90ஸ் கிட்ஸ்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!