வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆரம்பக்கால வரலாற்றை கூறும் 'மேதகு'..!

By manimegalai aFirst Published Jun 26, 2021, 4:11 PM IST
Highlights

தமிழீழ விடுதலைக்காக பாடுபட்ட ஒப்பற்ற போராளியான வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'மேதகு'. 

தமிழீழ விடுதலைக்காக பாடுபட்ட ஒப்பற்ற போராளியான வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'மேதகு'. இந்த படத்தை தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் உலக தமிழர்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு அதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: சுருள் சுருளாக முடி... அஞ்சலி பாப்பா போல் குட்டை கவுனில் கியூட் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்..!
 

இலங்கையில் தமிழர்கள் பட்ட துயரம் இன்று அல்ல என்று நினைத்தாலும் கண்ணீர் வரும். அந்த அளவிற்கு ஒவ்வொருவர் மனதிலும் ஆறாத ரணமாக பதிந்துள்ளது. அவர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும், அதனை தனது சிறு வயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு சாதாரண இளைஞன் எப்படி தன்னுடைய இனத்திற்கே விடுதலை பெற்று தர ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வருகின்றார் என்பதை பற்றியும் மிகவும் யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் எடுத்துள்ளார் படத்தின் இயக்குனர் கிட்டு.

மேலும் செய்திகள்: 150 கோடியில் இவ்வளவு வசதிகளுடன் கட்டப்படுகிறதா தனுஷின் புதிய வீடு..? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்..!
 

கதை, வசனம், எழுதி இப்படத்தை ஒரு ஈடு இணையற்ற படைப்பாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் தி.கிட்டு. ரியாஸ் ஒளிப்பதிவு அவரது காட்சிகள் மூலம் பேசுகிறது. இந்த படத்திற்கு பிரவீன் குமார் இசையமைத்துள்ளார். கலை இயக்குனர் முஜிபூர் ரகுமான், படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த திரைப்படத்தினை தஞ்சை குமார் மற்றும் சுமேசு இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தை மேற்பார்வையிட்டு இப்படைப்பினை உருவாக்கியுள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தில் ஈஸ்வர் பாட்சா மற்றும் சதீசு இருவரும் துணைபுரிந்துள்ளனர்.

மேலும் செய்திகள்: டிக் டாக் ஜி.பி.முத்து மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!
 

'மேதகு' என படத்திற்கு பொருத்தமான பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் BS value OTT தளத்தில், பிரபல Black sheep நிறுவனம்  Pay Per View என்கின்ற திட்டத்தின் மூலம் வெளியிட்டுள்ளது. இந்த படம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிகவும் எதார்த்தமாக இந்த படத்தை இயக்கி இருக்கும் இயக்குனருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

click me!