
சில மாதங்களுக்கு முன், என்ஜாய் எஞ்சாமி பாடலை ரவுடி பேபி தீயுடன் பாடி, உலக அளவில் பிரபலமாகியுள்ள தெருக்குரல் அறிவு தற்போது யுவன் ஷங்கர் ராஜாவுடன் முதல் முறையாக பாடியுள்ள 'Don't Touch Me' என்கிற பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
யுவன் ஷங்கர் ராஜா ஒரு பக்கம் திரைப்படங்களுக்கு மியூசிக் போட்டு கலக்கி வந்தாலும், அவ்வப்போது சில இண்டிபெண்டெண்ட் ஆல்பம் பாடல்களை இசையமைத்து பாடி, அதில் தோன்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனாவுடன் இவர் ஆடி... பாடி... வெளியான 'டாப் டக்கர்' ஆல்பம் பாடலை தொடர்ந்து தற்போது 'Dont Touch Me' ஆல்பம் பாடலில் பாடியுள்ளார்.
தொடர்ந்து தன்னுடைய ராப் பாடல்கள் மூலம், இடஒதுக்கீடு, சமூகப் பிரச்னைகளுக்கு, எதிராகவும் குரல் கொடுத்து வரும் அறிவு, என்ஜாய் எஞ்சாமி பாடல் மூலம், பழங்குடி மக்களின் தற்போதைய நிலையை கூறியிருந்தார். இப்பாடல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து உலக அளவில் ரசிக்கப்பட்ட பாடலாக மாறியது.
இதை தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராகாக 'Dont Touch Me' என்ற பாடலை அறிவு பாடியுள்ளார். இந்தப் பாடலை யுவன், தனது யு1 ரெக்கார்ட்ஸ் மூலமாகத் தயாரித்துள்ளார். இந்த பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.