
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் 'இந்தியன் 2 ' படத்தை முடித்து கொடுக்காமல், தெலுங்கு மற்றும் இந்தி படங்களை இயக்கி வருவதாக கூறிய 'இந்தியன் 2 ' தயாரிப்பு நிறுவனம் அவர் மீது புகாரும் கொடுத்துள்ளது. அதே போல் தற்போது தன்னுடைய நிறுவனத்திற்கு படம் இயக்குவதாக கூறிவிட்டு, தெலுங்கு படத்தை இயக்க லிங்குசாமி சென்றுவிட்டதாக அவர் மீது, பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார் கொடுத்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தானியிடம் லிங்குசாமி கூறிய கதை பிடித்து போகவே, அவரும் அந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லியதை தொடர்ந்து, அவரது கதையை ஆஹா... ஓ ஹோ... என தன்னுடைய சமூக வலைத்தளத்தில் புகழ்ந்திருந்தார் ராம். இந்த விஷயம் ஞானவேல்ராஜா காதுக்கு எட்டவே தான் தற்போது பிரச்சனை தெலுங்கு பிலிம் சேம்பர் வரை சென்றுள்ளது. ஆனால் ஞானவேல்ராஜா தெலுங்கு பிலிம் சேம்பரில் மெம்பர் இல்லை என்பதால் தெலுங்கு படம் இயக்க லிங்குசாமிக்கு தடை விதிக்க முடியாது என கூறி விட்டதாக கூறப்படுகிறது.
கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி சுமாரான வெற்றியை மட்டுமே பெற்ற திரைப்படம் 'சண்டக்கோழி 2 ' இதற்க்கு முன், இவர் தயாரிப்பில் உருவான 'உத்தம வில்லன்' படம் தான் இவரை இவரது இந்த பிரச்சனைக்கு காரணம் என தெரிகிறது. அப்போது இந்த படத்தை நம்பி, தனக்கு தெரிந்த நண்பர்கள் வட்டாரத்தில் பெரிய தொகையை வாங்கி படத்தை முடித்தார். ஆனால் படமே படு ஃபிளாப். அந்த சமயத்தில் லிங்குசாமிக்கு உதவியவர்களில் ஒருவர், ஞானவேல்ராஜா.
அப்போது தான் கொடுத்த பெரிய தொகையை வைத்து கொடுத்து தன்னுடைய நிறுவனத்திற்கு படம் இயக்கும்படி கூறியுள்ளார். அப்போது அதற்க்கு சம்மதம் தெரிவித்த லிங்குசாமி தற்போது தெலுங்கில் படம் இயக்க சென்றதால் தான் இப்பிரச்சனை வெடித்துள்ளது. நீண்டகால நண்பர்களாக இருந்து வரும் ஞானவேல்ராஜா - லிங்குசாமி இருவருக்குள் புகார் கொடுக்கும் அளவுக்கு பிரச்சனை வெடித்துள்ளது என வருத்தப்படுகிறார்கள் இவர்களது நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த நண்பர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.