
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் விஜய்யின் 'வாரிசு',மற்றும் அஜித்தின் 'துணிவு' திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் சுகுமார் அழகர்சாமி எழுதி இயக்கி, சிந்தியா லெளர்டே கதையின் நாயகியாக நடித்து தயாரித்துள்ள 'வர்ணாஸ்ரமம்' படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.
ஆணவக்கொலை பற்றிய நெஞ்சை பதறவைக்கும் படமாக உருவாகி உள்ள இதில் ராமகிருஷ்ணன்," பிக்பாஸ்" புகழ் அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானுவேல், வாசுதேவன், வந்தனா, உமா மகேஷ்வரி, ஏ.பி.ரத்னவேல், விசை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தீபன் சக்கரவர்த்தி இசையையும், உமாதேவி பாடல்களையும், கா.சரத்குமார் எடிட்டிங்கையும், பிரவீணா.எஸ். ஒளிப்பதிவையும், ராஜேஷ்கண்ணன் சண்டை பயிற்சியையும், புத்தமித்திரன் கலையையும், ஏ.பி.ரத்னவேல் நிர்வாக தயாரிப்பையும், எம்.பாலமுருகன் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனித்துள்ளனர்.
தமிழ் படங்களில் பாடுவதற்காக சென்னை வந்த அமெரிக்க பாடகியான சிந்தியா லௌர்டே அதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்காக படத்தயாரிப்பில் ஈடுபட்டார். அதற்காக சிந்தியா புரொடக்சன் ஹவுஸ் என்ற பட நிறுவனத்தை துவக்கினார். சுகுமார் அழகர்சாமியின் கதையை தேர்வு செய்து அவரையே படத்தை இயக்கச் சொன்னார். கதையின் நாயகியாக நடித்து, தனக்கு பிடித்தமான பாடலையும் பாடி , படத்தையும் தயாரித்துள்ளார். பல ஆயிரம் மைல்களை கடந்துவந்து தனது லட்சியமான பாடும் ஆசையை நிறைவேற்றுவதற்காக " வர்ணாஸ்ரமம்" படத்தை தயாரித்துள்ளார் சிந்தியா லௌர்டே.
Samantha Photos: உடல் மெலிந்து போன சமந்தா... சோகம் தள்ளாடும் முகத்துடன் வெளியான லேட்டஸ்ட் போட்டோ!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.