
விஜய் டிவியில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அதிக ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு, சிரிக்கப்படும் நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். கடந்த ஆண்டு 'குக் வித் கோமாளி' சீசன் 3 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், விரைவில் சீசன் 4 நிகழ்ச்சி துவங்க உள்ளதாக ப்ரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளது விஜய் டிவி.
இந்த நிகழ்ச்சியில் குக் மற்றும் கோமாளியாக கலந்து கொள்ளும் அனைவருமே மிகவும் பிரபலமாகி, அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்பு மற்றும் சின்னத்திரை வாய்ப்புகளை கைப்பற்றி வருவதால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர், நடிகைகள் என பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக இந்த நிகழ்ச்சியை கோமாளியாக இருந்த, புகழ், ஷிவாங்கி, பாலா, உள்ளிட்ட பலர், தற்போது வெள்ளித்திரையில் காமெடி நடிகர்களாக மாறியுள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும், மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
குக் வித் கோமாளி முதல் சீசனில் வனிதா டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றிய நிலையில், இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் வெற்றி பெற்றனர். இதை தொடர்ந்து சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கம்போல் நடுவர்களாக சமையல் கலைஞர்களான தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கோமாளிகளாக சுனிதா, மணிமேகலை, ஜிபி முத்து, உள்ளிட்ட சிலர் பங்கேற்க உள்ளதை புரோமோ மூலம் உறுதி செய்துள்ளது விஜய் டிவி.
எனினும் இந்த முறை 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் குக்குகளாக யார் யார் பங்கேற்பார்கள், கடந்த 3 சீசன்களிலும் கோமாளியாக பங்கேற்ற பலர், தற்போது வெள்ளித்திரை படங்களில் பிசியாகி உள்ளதால்... குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில்... புது கோமாளிகள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது வெளியாகியுள்ள புரோமோ பாடலே, அனைவரையும் கவரும் விதமாக அமைந்துள்ளது. விரைவில் நிகழ்ச்சி துவங்கும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.