சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர், கடந்த சில சில வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். இவருடைய உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வி.எம்.சுதாகர் மறைவு, ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களையும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இவருடைய மறைவுக்கு பலர் சமூக வலைதள மூலமாக தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில்... "என்னுடைய அருமை நண்பர் வி.எம் சுதாகர் நம்மை விட்டு பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும். மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள், அவர் ஆத்மா சாந்தி அடையட்டும் என ட்விட்டரில் பதிவிட்டு, தன்னுடைய இரங்கலை தெரிவித்திருந்தார்.
'துணிவு' படத்திற்காக மஞ்சு வாரியருக்கு ஜெட் ஸ்கை பயிற்சி கொடுத்த அஜித்..! அவரே பகிர்துகொண்ட தகவல்!
இதை தொடர்ந்து தன்மீது, பல வருடங்களாக எவ்வித எதிர்பார்க்கும் இன்றி அன்பு செலுத்திய "ரஜினி ரசிகர்கள் மன்ற மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர், வீட்டிற்கு நேரில் சென்று அவர் உடலுக்கு கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்".
விஜய் டிவி சீரியல் அம்மா நடிகைக்கு 45 வயதில் மறுமணமா? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்!
அப்போது கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சுதாகர் அவதிப்பட்டு வந்ததாகவும், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. ஒரு நல்ல நண்பனை இழந்து விட்டதாக மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். தன் மீது மிகவும் பாசம் வைத்திருந்தவர், நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைத்தவர். என அவருடன் உண்டான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.