
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதன் மூலம் ஒரு பக்கம் வனிதாவின் மகள் ஜோவிகா சம்பாதித்து வந்தாலும், மற்றொருபுறம்... வனிதா விஜயகுமார் தனியார் யூடியூப் சேனல்களுக்கு ரிவியூ செய்து அதன் மூலம் தனியாக கல்லா கட்டி வருகிறார்.
இவர் ரிவியூ செய்வதை பார்ப்பதற்கு என தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. குறிப்பாக ரிவியூ செய்யும் போது தன்னுடை மகள் யாருக்கும் மரியாதை கொடுக்காமல் பேசுவது பற்றி வனிதா அதிகம் பேசியது இல்லை. இதெல்லாம் இது போன்ற நிகழ்ச்சியில் சாதாரணம் என்றே கூறியுளளார். அதே நேரம் கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்க்காக, விசித்திராவிடம் கத்தி ஜோவிகா தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொள்ளவது தனக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் வழக்கம் போல் வனிதா ரிவியூ செய்த போது, தொகுப்பாளர் சாதாரணமாக கேட்ட கேள்வியை கூட, குதர்க்கமாக புரிந்து கொண்டு, இது என்னுடைய ரிவியூ... உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் மட்டும் கேளு என கூறுகிறார். அந்த தொகுப்பாளர் கோபத்தை வெளிக்காட்டாமல் சிரித்து கொண்டே சமாளிக்க, நீ ஏன் இப்போ சிரிக்குற என கேட்பது மட்டும் இன்றி, நீ சிரிப்பது... விசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் நக்கலாக பார்ப்பாரே, அப்போ எப்படி கடுப்பா இருக்குமோ அப்படி இருக்கு என சொல்கிறார்.
பின்னர் அந்த தொகுப்பாளரை பிரேமில் இருந்து தூக்குங்க என கூறும் வனிதா, அவரை வெளியேற்றிய பின்னர் மீண்டும் தன்னுடைய ரிவியூவை துவங்கியுள்ளார். வனிதாவின் இந்த அக்ரஸிவ் பேச்சின் வீடியோவை வெளியிட்டு நெட்டிசங்கள் அப்பவே இப்படி என்றால் பொண்ணு பத்தி சொல்லவா வேண்டும் என கமெண்ட் போட்டு தாளித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.