
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அந்த ரிசார்டில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மைக்கேல் என்பவருக்கு சொந்தமான அந்த ரிசார்டில் பல சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல சின்னத்திரை நட்சத்திரமான சங்கீதா இளம் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரியவந்தது.
மேலும் விபச்சாரத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்ட 3 இளம் நடிகைகளை மீட்ட போலீசார் அவர்கள் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்துள்ளனர். அதே போல் அந்த மூன்று நடிகைகளிடமும் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சென்னை ஈசிஆர் சாலைகளில் நூற்றுக்கணக்கான தனியார் ரிசாட்டுகளும், சொகுசு இல்லங்களும் உள்ளதாகவும் அதில் பெரும்பாலுமான ரிசாட்டுகளில் விபச்சாரங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
கைதான சங்கீதா வாணி ராணி, வள்ளி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.