
பிரபல நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வா இல்லத் திருமணத்துக்காக துபாய் சென்ற போது... அங்குள்ள ‘ஜூமெய்ரா எமிரேட்ஸ் டவர்ஸ்’ என்ற நட்சத்திர ஓட்டலில் நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தினருடன் தங்கினார்.
இந்த நிலையில் அன்றிரவு அவர் குளியல் அறைக்கு சென்றபோது பாத் டப்பில் மூழ்கி மரணமடைந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
ஸ்ரீதேவியின் இந்த திடீர் மரணம், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும், திரையுலகில் இவருடன் நெருங்கிய நட்புடன் இருந்த பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்றுவரை ஸ்ரீதேவியின் பிரிவு இவருடைய குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு நேற்று 22வது திருமண நாள். அதனால் ட்விட்டரில் போனி கபூர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் கலந்துக்கொண்ட திருமண விழாவில் எடுத்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அந்த விழா நடந்து முடிந்த இரண்டு நாட்களில் தான் ஸ்ரீதேவி ஹோட்டல் அறையில் நீரில் மூழ்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.