பிரபல சின்னத்திரை நடிகை விபச்சார வழக்கில்  கைது….. கையும் களவுமாக பிடிபட்டு புழல் சிறையில் அடைப்பு……

 
Published : Jun 02, 2018, 09:25 AM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
பிரபல சின்னத்திரை நடிகை விபச்சார வழக்கில்  கைது….. கையும் களவுமாக பிடிபட்டு புழல் சிறையில் அடைப்பு……

சுருக்கம்

vani rani seriel actress sangeetha arrest in brothal case

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி  தொடரில் நடித்து வரும் சங்கீதா என்ற நடிகையை போலீசார் விபச்சார வழக்கில் து செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான ரிசார்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பல சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல சின்னத்திரை நட்சத்திரமான சங்கீதா இளம் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று அவருடன் இருந்த சுரேஷ் என்ற நபரும் கைது செய்யப்பட்டார். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 3 இளம் நடிகைகளையும் போலீசார் மீட்டனர்.



சென்னை ஈசிஆர் சாலைகளில் நூற்றுக்கணக்கான தனியார் ரிசாட்டுகளும், சொகுசு இல்லங்களும் உள்ளதாகவும் அதில் பெரும்பாலுமான ரிசாட்டுகளில் விபச்சாரங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. கைதான சங்கீதா வாணி ராணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் வாணி ராணி குழுவினர் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில்  உறைந்தனர்.  சங்கீதாவின் கைது சின்னத்திரை வட்டாரத்தில் பரப்பாக பேசப்பட்டு வருகிறது.  சங்கீதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சில நடிகைகள் சிக்குவார்கள் என்று  போலீசார் தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!