காலா ரிலீஸ் தேதியை முடிவு செய்யப்போவதே நாங்கள் தான்; சவால் விடும் தமிழ்ராக்கர்ஸ்;

 
Published : Jun 01, 2018, 08:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
காலா ரிலீஸ் தேதியை முடிவு செய்யப்போவதே நாங்கள் தான்; சவால் விடும் தமிழ்ராக்கர்ஸ்;

சுருக்கம்

we are going to decide the release date says Tamil rockers

காலா திரைப்படம் பா.ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த திரைப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார்.

வரும் ஜூன் 7 அன்று உலகெங்கிலும் காலா திரையிடப்படவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீசாகவிருக்கும் இந்த படத்திற்காக, ரஜினியின் எமோஜி ட்விட்டரில் இன்று வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. முன்னதாக காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நந்தனம் YMCA மைதானத்தில் வைத்து பிரம்மாண்டமாக நடை பெற்றது.

அதனை தொடர்ந்து இப்போது காலா படத்தின் இரண்டாவது டீசர் இப்போது வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ரஜினி தெரிவித்திருக்கும் பொறுப்பற்ற கருத்தால், இப்போது அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் மக்கள்.

இதனால் காலா படத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கர்நாடகாவில் காலாவை ரிலீஸ் செய்ய விடமாட்டோம். என வட்டாள் நாகராஜ் ஒருபக்கம் சவால் விடுத்திருக்கிறார். இங்கோ தமிழ் நாட்டிலேயே ரிலீஸ் செய்ய விடமாட்டோம். என தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு புறம் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

இவ்வளவு பிரச்சனைகளும் ஒரு புறம் போய்க்கொண்டிருக்கையில், இன்னொரு பக்கம் தமிழ் ராக்கர்ஸ் காலா படக்குழுவிற்கு ஒரு சவாலை முன்வைத்திருக்கிறது.

அதில் காலா திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே, தமிழ் ராக்கர்ஸ்-ல் ரிலீசாகும். காலா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தீர்மானிக்க போவதே நாங்கள் தான். என சவால் விடுத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ் . இப்போது படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் காலா குழுவிற்கு, இது மேலும் ஒரு தலைவலியாக  அமைந்திருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பயங்கரமான அப்டேட் உடன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் பராசக்தி... டிசம்பர் 18ந் தேதி ரெடியா இருங்க..!
பொறுமையை சோதிக்கப்போகிறாரா விஜய்...? ஜன நாயகன் ரன் டைம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்