விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன கில்லி படத்தில் நடிக்க, முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகர் யார் தெரியுமா?

 
Published : Jun 01, 2018, 06:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன கில்லி படத்தில் நடிக்க, முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகர் யார் தெரியுமா?

சுருக்கம்

ultimate star refused but this actor taste the victory by taking risk

தமிழில் தளபதி விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் கில்லி. இயக்குனர் தரணி-ன் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த இந்த திரைப்படம், ஏற்கனவே தெலுங்கில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த ”ஒக்கடு” எனும் படத்தின் ரீமேக்.

இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் அல்டிமேட் ஸ்டார் அஜீத் தான். இந்த படத்தின் கதையை அவரிடம் கூறிய போது, கதை நன்றாக இருக்கிறது ஆனால் ரீமேக் என்பதால் அந்த அளவிற்கு போகுமா? என்ற சந்தோகத்தில் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

அந்த சமயத்தில் ரிலீசான சில ரீமேக் திரைப்படங்கள் படு தோல்வியை அடைந்திருந்தன. அதனால் தான் அஜீத் எச்சரிக்கை உணர்வுடன் அப்படி கூறியிருக்கிறார். ஆனால் ரிஸ்க் எடுக்க தயாராக இருந்த விஜய், தொடர்ந்து கில்லி படத்தில் நடித்து அது சூப்பர் ஹிட் ஆகவும் செய்தது.

தெலுங்கில் இத்திரைப்படத்தில் நடித்திருந்த ”மகேஷ் பாபு, பூமிகா” ஜோடியை விட ”விஜய், திரிஷா” ஜோடிதான் மக்கள் மனதில் இடம் பிடித்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் ”விஜய், திரிஷா” ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அதேபோல திரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ்-ன் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததும் இந்த படம் தான்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

படத்துக்காக அல்ல, பணத்துக்கும், புகழுக்கும் வேலை செய்கிறார்கள்; அனிருத் பற்றி தமன் ஆதங்கம்!
ரெஜினா கசாண்ட்ரா: முஸ்லிமாக பிறந்து கிறிஸ்தவ பெயர் வைத்தது ஏன்?