
“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார். கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார்.
ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது.இந்த படம் குறித்து ஏற்கனவே வெளியான தகவலில், இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா நடிப்பதாகவும் கூறப்பட்டது. முதன் முறையாக இந்தி நடிகை ஹுயூமா குரேஷி அஜித்துடன் ஜோடி நடித்துள்ளார். அஜித்திற்கே டப் கொடுக்கும் அளவிற்கு பைக் சீனில் செம்ம மாஸாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா பிரச்சனை முடியாமல் படப்பிடிப்பை தொடங்க வேண்டாம் என தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், 75 பேருடன் படப்பிடிப்பை துவங்கலாம் என அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வலிமை படத்தின் ஷூட்டிங்கை, ஆகஸ்ட் மாதம் துவங்க தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் ரசிகர்கள் பல நாட்களாக படத்தை பற்றி அப்டேட் கேட்டு போனி கபூரை நச்சரித்து வந்தனர். ஆனால் அவர் வாய் திறப்பதாக இல்லை. இந்நிலையில் அந்த படத்தில் வில்லனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் சூப்பர் தகவல் ஒன்றை கூறி தல ஃபேன்ஸை குஷியாக்கியுள்ளார். நேற்று இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு, தல ரசிகர்கள் காமென் டி.பி. எல்லாம் வெளியிட்டு தூள்கிளப்பினர். அதற்கு நன்றி தெரிவித்துள்ள கார்த்திகேயா, பொறுமையாக இருங்கள் வலிமை படம் குறித்து விரைவில் சிறப்பான அப்டேட் வரப்போகுது என தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அஜித் ரசிகர்களை செம்ம குஷியாக்கியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.