கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை மரணம்..! திரையுலகில் தொடரும் சோகங்கள்..!

Published : Sep 22, 2020, 07:44 PM ISTUpdated : Sep 22, 2020, 07:48 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை மரணம்..! திரையுலகில் தொடரும் சோகங்கள்..!

சுருக்கம்

பிரபல நடிகை ஒருவர், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.   

கொரோனா தொற்றால் அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பாலிவுட்டில் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆரத்யாவுக்கும், பிரபல தயாரிப்பாளரான போனிகபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர், அவரது காதலி மலைக்கா அரோரா, அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, விஷால், நிக்கி கல்ராணி, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் பூரண குணமடைந்து மீண்டும் வரும் நிலையில், சிலர் இறந்துவிடுவது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. 

நேற்று தமிழ் சினிமாவில்  விக்ரம் நடித்த தூள் படத்தில் டி.டி.ஆர். வேடத்திலும், விஜய் நடித்த கில்லி படத்தில் நடுவராகவும் நடித்திருந்தவர் ரூபன்.  சினிமா துறையில் ஸ்கிரீன் ரைட்டர் ஆக அவர் அதிகம் பணியாற்றி இருக்கிறார். ஒரு சில படங்களுக்கு கதை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். 54 வயதாகும் இவர் ஏற்கனவே நுரையீரல் புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இவர் இறந்த சோகம் கூட இன்னும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத நிலையில், பிரபல நடிகை ஒருவர், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். 

பிரபல மராத்தி நடிகை அஷலாட்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று (22/09/2020) காலை மரணமடைந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!