அஜித்தின் அல்டிமேட் குத்து... வேறலெவல்ல இருக்கே!! ‘Beast’க்கு போட்டியாக Valimai படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ

By Ganesh Asianet  |  First Published Feb 17, 2022, 9:02 AM IST

அஜித் நடித்துள்ள வலிமை (Valimai) திரைப்படத்தை வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ளனர்.


நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் (Boney Kapoor) தயாரித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

Tap to resize

Latest Videos

அதன்படி வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான புரமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

அந்த வகையில், கடந்த சில தினங்களாக வலிமை படத்தின் புரோமோ வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது வேறமாறி பாடல் புரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில் அஜித்தின் டான்ஸை பார்த்து ரசிகர்கள் மெர்சலாகிப் போய் உள்ளனர். இந்த புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலர் தினத்தன்று விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் அரபிக் குத்து பாடல் வெளியிடப்பட்டு வைரலாகி வரும் நிலையில், தற்போது அதற்கு போட்டியாகத் தான் அஜித்தின் அல்டிமேட் குத்து டான்ஸுடன் கூடிய புரோமோ வீடியோவை வலிமை படக்குழு வெளியிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதையும் படியுங்கள்....valimai climax : வலிமை கிளைமேக்ஸில் மாற்றம்.. அஜித் ஹேப்பியோ ஹேப்பி.. என்ன மாற்றம் தெரியுமா?

New Song Promo. February24 pic.twitter.com/ALcJeo6Ptm

— Boney Kapoor (@BoneyKapoor)
click me!