
பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் (Kottayam Pradeep) இன்று காலமானார். அவருக்கு வயது 61. இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி, நண்பேன்டா, விஜய்யின் தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மம்மூட்டி, மோகன்லால், பிரித்விராஜ், திலீப், உள்ளிட்ட முன்னணி மலையாள நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கோட்டயம் பிரதீப் (Kottayam Pradeep). இவரது திடீர் மறைவு ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மலையாள திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் பிரதீப். இவருக்கு மாயா என்கிற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். கோட்டயம் பிரதீப்பின் மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்.... Actress Megha Akash : ஸ்டைலாக தம் அடிக்கும் மேகா ஆகாஷ்.... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.