Valimai Release : வலிமை படத்திற்கு மட்டும் இத்தனை காட்சிகளா? கடுப்பாகும் சிம்பு ரசிகர்கள்...

Kanmani P   | Asianet News
Published : Dec 11, 2021, 03:06 PM IST
Valimai Release : வலிமை படத்திற்கு மட்டும் இத்தனை காட்சிகளா? கடுப்பாகும் சிம்பு ரசிகர்கள்...

சுருக்கம்

valimai movie screening  from midnight :  மாநாடு படத்திற்கான சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதால் நள்ளிரவு முதல் காத்திருந்த சிம்பு ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இவ்வாறு இருக்க அஜித் படத்திற்கு மட்டும் நள்ளிரவில் இருந்து காட்சியா என சிம்பு ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் அஜித்.  இன்ன காரணம் இன்றி தினமும் அஜித்தின் ஹேஸ் டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.  இவர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த வலிமை வரும் ஜனவரியில் திரைக்கான உள்ளது.ரசிகர் பட்டாளத்தை மனதில் கொண்டு முதல் நாளே வசூலில் சாதனை படைக்க படக்குழு முடிவு செய்து விட்டனராம். 

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின் அஜித்தும், எச்.வினோத்தும் இணைந்து பணியாற்றியுள்ள படம் வலிமை. போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்க, யோகிபாபு, புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  இதற்கிடையே வலிமை படத்திலிருந்து முதல் சிங்கிளாக "நாங்க வேற மாறி " சாங் ரிலீஸ் ஆகி மாஸ் ஹிட்டடித்தது. இந்த பாடலை தல ரசிகர்கள் வெறித்தனமாக ட்ரெண்டாக்கி வந்தனர். பின்னர் படத்திலிருந்து செகண்ட் சிங்கிளாக அம்மா சாங் வெளியிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே தயாரிப்பாளர் கூற்றுப்படி வலிமை வரும் ஜனவரியில் ரிலீஸாக இருப்பதால் இந்த மாதம் முழுவதும் வலிமை கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை விற்றுள்ளது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதன்படி சென்னை - ரோமியோ பிக்சர்ஸ்,  செங்கல்பட்டு - ஸ்கைமேன் தயாரிப்பு, கோயம்புத்தூர் - SSIP தயாரிப்பு, மதுரை - கோபுரம் பிலிம்ஸ், திருச்சி -  ஸ்ரீ துர்காம்பிகை பிலிம்ஸ், சேலம் - ஸ்ரீ குமரன் பிலிம்ஸ், உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ரிலீஸுக்கு முன்னமே ஆரம்பித்து விட்ட கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள காசி திரையரங்கில் நேற்று மாலை ஒளிபரப்பட்ட அனைத்து காட்சிகளுக்கு இடையே வலிமை முதல் மோஷன் போஸ்டர் ஒளிபரப்பட்டுள்ளது.

இந்நிலையில் வலிமை படக்குழு முதல் நாள் வசூலில் ரெக்கார்ட் பிரேக் செய்ய வேண்டும் என்பதற்காக நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் அன்று 8 காட்சிகள் வரை திரையிட முடியும்.

இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்து, முதல் நாள் வசூல் சாதனை படைக்கும். இதற்கான தீவிர பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

ஆனால் சமீபத்தில் வெளியான மாநாடு படத்திற்கான சிறப்பு காட்சியை சில பிரசனைகளால் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளை ரத்து செய்ததோடு, காலை 8 மணிக்கு தான் படத்தை திரையிட்டிருந்தனர். இதனால் நள்ளிரவு முதல் காத்திருந்த சிம்பு ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இவ்வாறு இருக்க அஜித் படத்திற்கு மட்டும் நள்ளிரவில் இருந்து காட்சியா என சிம்பு ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தென்னிந்தியாவின் 'ராஜமாதா'; 40 ஆண்டுகால உழைப்பு; 200 கோடி சொத்து: ரம்யா கிருஷ்ணனின் அசுர வளர்ச்சி!
லாக்கப்பில் கார்த்திக்: துடி துடித்துப் போன ரேவதி: அதிரடி திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!