Naanum Rowdy Dhaan : விஜய் சேதுபதி அளித்த வாய்ப்பை தவறவிட்ட ஹீரோ...

Kanmani P   | Asianet News
Published : Dec 11, 2021, 02:37 PM IST
Naanum Rowdy Dhaan : விஜய் சேதுபதி அளித்த வாய்ப்பை தவறவிட்ட ஹீரோ...

சுருக்கம்

Naanum Rowdy Dhaan :"நானும்  ரவுடி தான்" படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு விட்டதாக 'ஓ மை கடவுளே' நாயகன் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படம் மாஸ் வெற்றி பெற்றிருந்தது. இந்த படம்  நாயகி நயன்தார, நாயகன் விஜய் சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் என அனைவருக்கும் திருப்பு முனை தந்த படமாக அமைந்திருந்தது. நகைச்சுவை ததும்ப உருவாக்கப்பட்ட இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸின் கீழ் தயாரித்திருந்தார். இதன் வெளியீட்டு உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் பெற்றிருந்தது. அந்நட்களில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இயக்க 2013-ல் முடிவு செய்த விக்னேஷ் சிவன்  முதலில் அனிருத்தை நடிக்க வைக்க அவரிடம் பேசியுள்ளார். ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இப்படத்தில் இருந்து அனிருத் விலகினார். 

அதன் பிறகே விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகே பிறகே விக்னேஷ் சிவன் - நயன்தாரா இடையே காதல் மலர்ந்துள்ளது.-இந்நிலையில் தன்னை நாயகனாக நடிக்கும் படி அப்போது விஜய் சேதுபதி கேட்டதாகவும், சில தவிர்க்க முடியாத சூழலில் நனையும் ரவுடி தான் படத்தில் தன்னால் நடிக்க இயலவில்லை என்றும் அசோக் செல்வன் கூறியுள்ளார்.

'ஓ மை கடவுளே' என்னும் படத்தில் நடித்துள்ள அசோக் செல்வன் தற்போது கொடுத்துள்ள பேட்டியில் நானும் ரவுடி தான் பட வாய்ப்பை மிஸ் செய்து விட்டதாக முகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷை வீட்டை விட்டு துரத்த விஜயா போடும் புது பிளான்... ரோகிணிக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்