kadhal movie : காதல் படத்தில் நடிக்க ஒப்பந்தமான மாஸ் நடிகர் ... இவர் தவற விட்ட வாய்ப்பை பயன்படுத்திய "பரத்"

Kanmani P   | Asianet News
Published : Dec 11, 2021, 01:49 PM IST
kadhal movie : காதல் படத்தில்  நடிக்க ஒப்பந்தமான மாஸ் நடிகர் ...  இவர் தவற விட்ட வாய்ப்பை பயன்படுத்திய "பரத்"

சுருக்கம்

kadhal movie : பரத் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த  "காதல்" திரைப்படத்தில் நடிக்க முன்னதாக பிரபல நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக தகவல் கசிந்துள்ளது.

கடந்த  2004ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் "காதல்". இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சந்தியா நடித்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த படம் ரசிகர்களிடையே இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

தெலுங்கில் ப்ப்ரேமிச்டே என்னும் பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய உரிமையை கைப்பற்றிய இயக்குனர் ஷங்கர் அதனை தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கி இருந்தார். இந்த படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். 

 பரத், சந்தியா, சுகுமார் மற்றும் பலர் நடித்திருந்த இந்த படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு  அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. மேலும் இத்திரைப்படம் தென்னிந்தியத் திரைப்படங்களிற்கு வழங்கப்படும் விருதான பில்ம்பேரின் 2004 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் என விருது பெற்றது.

இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திருந்த இந்த படத்தில் முதலில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், தவிர்க்க முடியாத காரணங்களால் தனுஷ் "காதல்"  நடிக்க இயலாமல் போனதாக சொல்லப்படுகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!