
2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். 90 ஸ் களில் பிறந்த இளம் பெண்களின் மனம் கவர்ந்த கதாநாயகனாக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் நடிப்பில் வெளியான ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்கள் அன்றைய காலகட்டத்தில் நல்ல வெற்றியை பெற்றது. இதில் தனது முதல் படமான ரோஜாக்கூட்டம் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்ற ஸ்ரீகாந்த் பின்னர் இவர் நடிப்பில் வெளியான பார்த்திபன் கனவு "தமிழ்நாடு திரைப்பட விருது" பெற்றது.
இதன்பிறகு ஜூட், போஸ், கனா கண்டேன், பம்பரக்கண்ணாலே, உயிர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து விட்டார். ஆனால் இவரது அறிமுகத்தின் போது கிடைத்த வெற்றி பின் நாட்களில் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இவர் தற்போது செந்தில் குமார் இயக்கத்தில் காக்கி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஸ்ரீகாந்தை சந்தித்த சீரியல் நடிகை அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவுதான் தற்போது வைரலாகி வருகிறது.கேரளாவை சேர்ந்த சீரியல் நடிகை மீரா கிருஷ்ணா தமிழில் பல சீரியல்களில் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பான "நாயகி", கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான "வந்தாள் ஸ்ரீதேவி", விஜய் டிவி சீரியலான அன்புடன் குஷி, தமிழும் சரஸ்வதியும் உள்ளிட்ட நாடகங்களில் மாமியார், அம்மா போன்ற கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து " எனது பள்ளி மற்றும் கல்லூரி நாயகன் என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் நீங்கள் 70ஸ் கிட் என நினைத்திருந்தோம். ஆனால் நீங்கள் 90ஸ் கிட்டா? பின்னர் ஏன் அம்மா ரோலில் நடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.